உணவு உலகின் இரும்பு ராணி வாழைப்பூ | தினகரன் வாரமஞ்சரி

உணவு உலகின் இரும்பு ராணி வாழைப்பூ

வாழைமரத்தின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசிய பிராந்தியமாகும். வாழை மூஸா (Musa) இனத்தை சார்ந்தது. பழங்களில் தர்ப்பூசணிக்கு அடுத்ததாக அதிகளவு உற்பத்தி செய்யப்படும் பழ இனவகையாகும். சாதாரணமாக வருடத்திற்கு 114 மெற்ரிக் தொன் வாழை உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகில் எல்லா நாடுகளிலும் பழமாக பிரபல்யம் அடைந்திருந்தாலும் வாழைப்பூவை உணவாக அதிகம் பாவிப்பது இந்தியா, இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயாகும். 

எமது மூதாதையர்களிடையே மிகவும் போசனை மிக்க ஒன்றாக முக்கிய இடத்தை வாழைப்பூ பெற்றிருந்தாலும் தற்போது நமது உணவுப் பட்டியலில் மெல்ல மெல்ல கீழிறங்கியுள்ள மரக்கறியாகவே உள்ளது. விலை குறைவென்றாலும், பெறுவதற்கு இலகுவான ஒன்றாக இருந்தாலும் அதனைப் பற்றி சரியாக அறியாததனால் அதற்கு எமது உணவில் முக்கிய இடத்தை நாம் அளிப்பதில்லை. வாழைப்பூ பல மோசமான நோய்களுக்கு தீர்வை தரும் மருத்துவ குணம் மிகுந்த ஒன்றாகும். 

இரும்பு என்பது இரத்த உற்பத்திக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். மனித உடம்பில்  நூற்றுக்கு 70 வீதமாகக் காணப்படும்  இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் மயோகுளோபின் எனப்படும் தசைநார்களிலும் காணப்படுகின்றன. ஒட்சிசனை சுவாசப்பையிலிருந்து இழையங்களுக்கு மாற்றுவதற்கு ஹீமோகுளோபின் அத்தியாவசியமாகும். 

இரும்பில் நூற்றுக்கு 6 வீதம் சுவாசம் மற்றும் சக்தி உருவாக்கத்திற்கு அத்தியாவசியமான சில புரோட்டீன்களின் மூலக்கூறுகள் காணப்படுவதோடு, கொலாஜன் மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான இரும்பு மூலக்கூறும் காணப்படுகின்றது. நோயெதிர்ப்பு சக்திக்கும்  இரும்பு அவசியம். அதன்படி மனித இரத்தம் மற்றும் சிறந்த உடல், மனநிலையை தீர்மானிக்கும் நாம் பெற்றுக் கொள்ளும் உணவு பதார்த்தங்கள் முக்கியமானவையாகும். இரத்தத்தில் இரும்பு சக்து குறை, அதாவது இரத்தக்குறை எனப்படும் இரத்தது சோகைக்கு முக்கியமான காரணியாகின்றது. 

இரத்தச் சோகை என்பது உலகம் பூராவும் குழந்தைகள் கர்ப்பிணி பெண்களிடையே காணப்பட்ட பொதுமக்களின் சுகாதார பிரச்சினையாகும். இலங்கையின் தேசிய போசனை மற்றும் நுண் போசனை ஆய்வு (2012) அறிக்கையில் இலங்கையில் சிறுவர்களிடையே இரத்தச் சோகை நூற்றுக்கு 15.1 வீதமாகும். 

இலங்கையில் இனப்பெருக்க வயதிலுள்ள பெண்களிடையே இரத்தச் சோகை நூற்றுக்கு 3260ஆகும். 

ஒவ்வொரு ஏழு குழந்தைகளில் ஒருவருக்கும். பெண்களில் மூன்று பேரில் ஒருவரும் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதற்கு முக்கிய காரணம் இரும்பு சத்து குறைப்பாடாகும். 

இலங்கையின் சுகாதார பிரச்சினைகளில் இது முதலிடம் வகிக்கின்றது. இரும்புசத்து குறைவுக்கு முக்கிய காரணியாக அமைவது நாம் உட்கொள்ளும் உணவில் உடம்புக்குக்த் தேவையான இரும்புச்சத்து கிடைக்காமையாகும். தேவையான இரும்பை பெற்றுகொள்ள ஊட்டச்சத்தியலாளர்கள் இரும்பு சத்து அடங்கிய உணவுகளை அதிகமாக பெற்று கொள்ளும்படி பரிந்துரைக்கின்றார்கள். உணவுகளில் இரண்டு வகையான இரும்பு சத்துக்கள் உள்ளன. மாமிச உணவுகளில் காணப்படும் இரும்பு சத்து ஈம் இரும்பு என்று அழைக்கப்படுகின்றது. சாதாரணமாக ஈம் இரும்பு சரீரத்தில் இலகுவாக பயன்படுத்தக் கூடியது. தாவர உணவுகளில் உள்ள ஈம் அல்லாத இரும்பு சத்தை இலகுவாக சரீரத்தால் பெற்றுகொள்ளமுடியாது. உடம்புக்கு தேவையான் ஈம் அல்லாத இரும்புசத்தை விற்றமின் சீ கொண்ட உணவுகளுடனேயோ அல்லது ஈம் அடங்கிய மாமிச உணவுகளுடனேயோ பெற்றுகொள்ளுமாறு சத்தியலாளர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள். 

மேற்குலக நாடுகளின் போசனை விஞ்ஞான நூல்களில் மாமிசம், ஈரல் போன்றவற்றிலேயே அதிகமாக இரும்பு சத்து காணப்படுவதாக அறிந்துள்ளோம். 

தாவர உணவுகளை பசளி, பயற்றங்காய், பயறு, போஞ்சி போன்றவற்றில் இரும்புசத்து காணப்படுகின்றது. 100 கிராமில் மேற்கூறிய தாவரங்களில் 3-4 மில்லிகிராமும் 100 கிராம் ஈரலில் 6+.5 மில்லிகிராம் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. 

உலக உணவுகளிடையே இரும்பு பதார்த்தம் அதிகளவு அடங்கிய உணவு என போசனையியலாளர்கள் சாதாணமாக விலை அதிகம் கூடிய அதிக உஷ்ணமான உணவென சிப்பியையே கருதுகின்றார்கள். மட்டி எனப்படும் சிப்பிவகைகளில் நூற்றுக்கு 28 மில்லிகாரம் இரும்பு அடங்கியுள்ளது. அது சாதாரணமாக கர்ப்பினி பெண்களுக்கு நாள்தோறும் தேவைப்படும் இரும்புச் சத்தின் அளவாகும். 

ஆனால் அண்மைய கண்டுபிடிப்புகளின்படி 100 கிராம் வாழைப்பூவில் 56.4 மில்லி கிராம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறுவிதமான கூறுவதென்றால் கர்ப்பிணி பெண்ணொருவர் தனக்கு தேவையான இரும்புசத்தை பெற்றுகொள்ள 50 கிராம் வாழைப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் போதுமானமாகும். 

சாதாரணமாக செப்பு கனிய உப்புகள் அதிகமுள்ள உணவாக நண்டு, சிப்பி என்பவற்றையே குறிப்பிடுகின்றார்கள். இவற்றில் 100 கிராமில் 3-4 மில்லி கிராம்கள் காணப்படுகின்றதோடு என்னில் 2.5 மில்லிகிராம், மரமுந்திரிகையில் 100 கிராமில் 2.2 மில்லிகாரமும், அடங்கியுள்ளது. ஆனால் 100 கிராம் வாழைப்பூவில் 13 மில்லிகிராம் அடங்கியுள்ளது. செம்பை அதிகமாக பெறுவதனால் உடலில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் தினந்தோறும் உணவில் வாழைப்பூவை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. 

இதைதவிர வாழைப்பூவில் பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம், சிங் போன்ற கனிய உப்புகள் அதிகமாகவுள்ளன. வாழைப்பூவில் அடங்கியுள்ள நார்பொருட்கள் போசனையை மேலும் அதிகரிக்க செய்கின்றன. வாழைப்பூவில் விற்றமின் சீ.ஏ. என்பவனவும் உண்டு. அத்துடன் வாழைப்பூவில் புரோட்டினும் அதிகளவில் உண்டு.  

வாழைப்பூவின் கிருமிகள் அழிக்கும் தன்மை. வாழைப்பூவை ஒவ்வாமைக்குள் சிகிச்சையாக பாவிக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. வாழைப்பூ புண்களை குணமாக்கின்றது. வாழைப்பூ சாற்றால் மலேரிய குடம்பிணிஸ் வளர்ச்சியை தடுக்க முடியும் என்பதை சில ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

விஞ்ஞானிகளின் அதிகமான கவனத்தை ஈர்த்த விடயம் வாழைப்பூவில் உள்ள இரத்தத்திலுள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை பற்றியதாகும். வாழைப்பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன் உடற் பருமனையும் குறைக்க உதவுகின்றது. 

சுது மாத்திரமல்லாமல் அதில் அடங்கியுள்ள மக்னீசியம் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது. 

மாதவிடாய் காலங்களில் வாழைப்பூவை சாப்பிடுவதன் மூலம் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகின்றது. யோகட்டுடன் அமைத்த வாழைப்பூவை சாப்பிடுவதால் உடலில் புரொகெஸ்ட்ரோன் ஹோமோன் அதிகமாக சுரப்பதால் இரத்தப்போக்கு குறைவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

வாழைப்பூ கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் சிறந்த போசனையான உணவாகும். வாழைப்பூ எவ்வித பக்கவிளைவுகளுமற்ற உணவாகும். எவ்வாறாயினும் நோய் தடுப்புக்கான மருந்தாக பரிந்துரைக்க இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  

கெமுனு சாலிய பெரேரா
மக்கள் சுகாதார பரிசோதகர்,
கொழும்பு மாநகர சபையின்
உணவு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவு.
தமிழில்: வீ.ஆர். வயலட்.

Comments