சமந்தா எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா? | தினகரன் வாரமஞ்சரி

சமந்தா எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா?

விவாகரத்தை அறிவித்த சமந்தா ரிலாக்ஸ் செய்வதற்காக ரிஷிகேஷுக்கு சென்றிருக்கிறார். சமந்தாவும், அவரின் காதல் கணவரான நாக சைதன்யாவும் பிரிந்துவிட்டார்கள். இது குறித்து அக்டோபர் 2ம் திகதி அறிவித்தனர். திரும்பும் பக்கம் எல்லாம் சமந்தாவின் விவாகரத்து பேச்சாக உள்ளது.இந்நிலையில் புதுப்பட வேலையை துவங்கும் முன்பு ரிலாக்ஸ் செய்ய உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் ரிஷிகேஷுக்கு சென்றிருக்கிறார் சமந்தா.
அங்கு தான் தங்கியிருக்கும் இடத்தில் உள்ள நீச்சல் குளம், சுற்றுச்சூழல், ஆன்மிக இடம் உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் போஸ்ட் செய்திருக்கிறார் சமந்தா.

குழந்தை பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட சமந்தா புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் விவாகரத்து வரை வந்துவிட்டதால் புதுப்படங்களுக்கு ஓகே சொல்கிறார்.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீதேவி மூவீஸ் நிறுவனம் ஆகியவை தயாரிக்கும் படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே சமந்தாவின் விவாகரத்து தகவல் வெளியானதும் அவருக்கும், ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேச்சு கிளம்பியது.இது குறித்து ப்ரீத்தம் விளக்கம் அளித்தார். சமந்தா தனக்கு அக்கா போன்றவர் என்றார் ப்ரீத்தம். இந்நிலையில் ப்ரீத்தம் ஜுகல்கர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

Comments