உருவ கேலி... பதிலடி கொடுத்த காஜல் அகர்வால் | தினகரன் வாரமஞ்சரி

உருவ கேலி... பதிலடி கொடுத்த காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடிக்கொடுக்கும் படி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காஜல் அகர்வால் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு போன்று பல மொழிகளில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அவர் பகிர்ந்த அந்த புகைப்படத்தை சிலர் உருவ கேலி செய்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன். மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள் எதற்கும் உதவாது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், வாழு, வாழவிடு" எனக் குறிப்பிட்டு அறிக்கையை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Comments