கடுப்பானார் ஸ்ருதி | தினகரன் வாரமஞ்சரி

கடுப்பானார் ஸ்ருதி

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், மும்பையில் காதலருடன் வசித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில், அவரிடத்தில் தென்னிந்தியாவிலிருந்த வந்த நீங்கள் எப்படி ஹிந்தி பேசுகிறீர்கள் என ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு, " தென்னிந்திய என்ன வேற்று கிரகமா. தென்னிந்தியா, வட இந்தியா என பாகுபாடு எதற்கு? அனைவரும் படம் எடுக்கிறோம், உழைக்கிறோம். 2022ல் இதுபோன்று பாரபட்சம் பார்க்க நேரமில்லை " என கோபத்துடன் பதிலளித்துள்ளார் ஸ்ருதி.

Comments