
சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இதன்பின், விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, நிபுணன், சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
கதாநாயகியாக மட்டுமல்லாமல், வில்லி கதாபாத்திரத்திலும் அசத்தி வரும் நடிகை வரலட்சுமிக்கு தெலுங்கு மார்க்கெட் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் நடிகர் விஷால் இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், நடிகர் சங்கத்தில் சரத்குமாருக்கு, விஷாலுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையிம் காரணமாக, வரலட்சுமி காதல் தோல்வியடைந்தது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.