
நடிகை சாய் பல்லவி குறித்து வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக தீயாய் பரவியுள்ளது.
சாய் பல்லவி தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய், விராட பர்வம், கார்கி படங்கள் வரவேற்பை பெற்றன. படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் சாய் பல்லவிக்கான மார்க்கெட் உயர்ந்துள்ளது.
புஷ்பா 2படத்தில் சாய் பல்லவி இடம்பெறுவதாக தகவல்கள் பரவின.
இந்த படத்தில் பழங்குடியின பெண் கேரக்டரில் அவர் நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் புஷ்பா 2படத்தில் சாய் பல்லவி இடம்பெறவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து திரைத்துறையில் சாய் பல்லவி ஆக்டிவாக இருந்து வருகிறார். சாய் பல்லவி ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 2015-ல் வெளியான பிரேமம் திரைப்படம், சாய் பல்லவியின் கெரியரில் திருப்பத்தை ஏற்படுத்தியது