ஜி.வி.பிரகாஷுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேரும் இவானா | தினகரன் வாரமஞ்சரி

ஜி.வி.பிரகாஷுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேரும் இவானா

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார், இவரது படங்கள் பெரும்பாலும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு பிடித்தமானதாக இருக்கின்றது. இவர் தற்போது அறிமுக இயக்குனர் பி.வி.சங்கர் இயக்கத்தில் 'கள்வன்' என்கிற படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் இரண்டாவது முறை இவருக்கு ஜோடியாக இவானா நடிக்கிறார். இதற்கு முன்னர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் இவானா நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக, இவருடன் ஜோடி சேர்ந்து 'கள்வன்' படத்தில் நடிக்கிறார்.

தமிழில் நாச்சியார் மற்றும் ஹீரோ போன்ற படங்களில் இவானா நடித்திருந்தாலும், பிரதீப் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'லவ் டுடே' படம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இப்படத்தின் மூலம்இவானாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இவானா நடிக்கும் 'கள்வன்' படத்தின் மோஷன் போஸ்டரை கடந்த ஜனவரி 6ம் திகதி நடிகர் தனுஷ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் படம் வெற்றிபெறவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த மோஷன் போஸ்டர் பலரின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது, பசுமை போர்த்திய அடர்ந்த காடுகளின் பின்னனியில் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது காடுகளையும், காட்டில் வாழக்கூடிய விலங்கினங்களையும் வைத்து ஒரு த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. இப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் மட்டுமின்றி இதில் சில நகைச்சுவை காட்சிகளும் இடம்பெற்று இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments