அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து இறைவனுடன் ஐக்கியமடையச் செய்வதே ஆன்மீகத்தின் முக்கிய நோக்கமாகும். ஆன்மீகச் செயற்பாடுகளே ஆன்மீக இலட்சியத்துக்கு வழி அமைக்கும் சிறந்த வழிகளாகும். இந்த வகையில் ஸ்ரீ ஐயப்ப வழிபாட்டு முறைகளும் ஆன்மீகத்தின் பால் மக்களை இட்டுச் செல்வதற்கான பாலமாக அமைந்துள்ளது. சகலவிதமான பிரிவு பேதம் உயர்வு, தாழ்வு, ஏற்றம், இறக்கம் ஆகியவற்றைக் கடந்து ஸ்ரீ...