ஹற்றன், வெளிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்திலுள்ள 4 வயது சிறுவன் ஒருவர் அண்மையில் சுகவீனமுற்ற நிலையில் உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உயிரிழந்தார். வீதி குண்டும் குழியுமாக சேதமடைந்திருந்தமையாலேயே இவ்வவலம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.வீதி எமது வாழ்வோடு ஒன்றித்த ஒன்றாகும் மக்களின் முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தியும்...
இன்று அவரின் 23 ஆவது ஆண்டு நினைவஞ்சலி
உலகிலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள் என்றுமே போற்றப்படுபவர்கள். இந்த வரிசையில் மேற்குலக நாடுகள், மத்திய கிழக்கு, ஆபிரிக்கக்கண்டம், தெற்காசிய நாடுகளில் இன, மத வேறுபாடுகளைக் கடந்து மனித குலத்திற்கு வழிகாட்டியவர்களே அன்றும் இன்றும் போற்றப்பட்டு வருகின்றார்கள். இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் அமரர் சௌமிமூர்த்தி தொண்டமான்...
எமது நாடு இன்று கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு வரும் சூழலில் நாம் அதற்கு தீர்வும் நெருக்கடிகள் உருவாவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டாக வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.சுதந்திரத்திற்கு பின்னரான காலத்திலிருந்தே படிப்படியாக நாடு வங்குரோத்து நிலையை நோக்கி வந்ததை காணலாம். இதற்கு அனைத்து அரசும், மக்கள் பிரதிநிதிகளுமே...
50ஆயிரம் கையெழுத்துடன் ஜனாதிபதியின் கவனத்துக்கு
மலையகத்தில் 1987ஆம் ஆண்டுக்கு பின் பெருந்தோட்ட மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி மற்றும் வீட்டுரிமை பத்திரம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக கண்டி அபிவிருத்தி தாபனம் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 50ஆயிரத்திற்கு மேலான கையொப்பங்களை பெற்று மகஜர் கையளிக்கவுள்ளது.இவ்வாறு...
இலங்கை புகையிரத பாதைகளில் மிகவும் விசாலமானதும் அற்புதமான திகில் அனுபவங்களை தரும் சிங்கமலை சுரங்கம் உலகில் பேசப்படும் ஒரு பிரதான சுரங்க பாதையாகும்.புகையிரத பயணம் என்றால் எமது வாழ்வில் பெரியோர் முதல் சிறியோர் வரை மறக்க முடியாத அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் தரும் ஒன்றாகும். அதிலும் மலையக புகையிரத பயணம் முற்றிலும் வித்தியாசமானதும் கலைத்துவமிக்கதும் ஆகும்.இதற்கு பிரதான...
இலங்கைக்கு 200வருடங்களாக அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்டத்துறையில் தோட்டத் தொழிலாளர்களை தவிர்த்து பெருந்தோட்ட சேவையாளர்கள் சமூகம் அதிகம் பேசப்படாதவர்களாகவும் அவர்களின் நன்மை, தீமைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்தும் வழங்கியதாக தெரியவில்லை. இலங்கை பெருந்தோட்ட சேவையாளர்களின் 2022/2025ஆகிய மூன்று வருடங்களுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக்...
கடந்த வார இறுதியில் காற்று வாக்கில் ஓர் குளிர்ச்சியான செய்தி காதுகளை வந்தடைந்தது. மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் கூடிப் பேசினார்கள் என்பது தான் அந்தச் செய்தி. இதனால் பெருந்தோட்டக் கம்பனி தரப்பு ஆடிப் போய்விடும் என்றோ பேரம் பேசும் அரசியல் வாய்ப்பு நாடி வருமென்றோ எண்ணினால் அது சப்பைக் கொட்டுத்தான்.ஏனெனில் மலையக தலைமைகளிடம் வாய்பலம் மிக மிக...
நாட்டின் சமகால பொருளாதார தன்மை மலையக மக்களை வெகுவாக பாதித்துள்ளது. பிந்திய நிகழ்வுகளாக மண்ணெண்ணெய், மா விலை அதிகரிப்பு மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இம்மக்களைப் போட்டு வதைக்கின்றது. மண்ணெண்ணெய் விலை ஏற்றத்தை சமாளிக்க நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைகக்கால வரவு செலவுத் திட்ட உரையின் போது குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை எவ்வித...
மண்ணெண்ணெய் விலைஅதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியதன் மூலம் பெருந்தோட்ட சமூகம்கண்டுகொள்ளப்படாதோ எனும் கவலை எழுவது தவிர்க்க இயலாததே. இதைச் சரிசெய்வதுபோலவே இ.தொ.கா. பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இதுபற்றிதாம் ஜனாதிபதியோடு பேசியிருப்பதாகவும்...
'6984இற்கும் அதிகமான பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்குள் சில மலையக பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. எனினும் இது போதுமானதல்ல. அனைத்து மலையக பாடசாலைகளிலும் இந்த இலவச உணவு விநியோகம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவது அவசியம்'கொவிட் பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடியின்...