பார்வையில்லாமல் படியேறும் நாலுகால் ரோபோ! | தினகரன் வாரமஞ்சரி

பார்வையில்லாமல் படியேறும் நாலுகால் ரோபோ!

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானிகள், நான்கு கால்களைக் கொண்ட, 'சீட்டா 3' என்ற ரோபோவை பரிசோதனை செய்து வருகின்றனர் பொறியியலாளர்கள்.

அது பெயருக்கேற்றபடியே, சிறுத்தை போல ஓடவும், நடக்கவும், தாவவும் கற்றுக்கொண்டு விட்டது. அடுத்த கட்டமாக, அதற்கு பார்வைத் திறன் இல்லாமலேயே, படிக்கட்டுகளில் ஏறுவதற்கு பயிற்சி வழங்கவுள்ளனர்.

ரோபோக்கள் எதிரே உள்ள தடைகள் மீது மோதாமல், நடப்பதற்கு பார்வையை நம்பியிருப்பது உதவாது என்கின்றனர் விஞ்ஞானிகள். பார்வை மூலம் வரும், தகவல்களை ரோபோ புரிந்துகொண்டு சுதாரிப்பதற்குள், அவை கீழே விழுந்துவிடும்.

எனவே, சீட்டா 3இன் கால்களில் உள்ள ஏராளமான உணரிகளை மட்டுமே வைத்து, நடை பழகுவதற்கு தேவையான புதிய மென்பொருள் நிரல்களை, மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.

பெ. திலானுஷா,

கொ/இராமநாதன் இ.ம.கல்லூரி,

கொழும்பு 04.

Comments