![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/01/27/Winning.jpg?itok=q0asV1Ju)
வாழ்வில் இனிமையை பெற விரும்புவோர், பின்பற்ற வேண்டிய குணங்களில் முக்கியமானது பொறுமை.
மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு, அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு எல்லாப் பரிசுகளும் தானாகவே வந்து சேரும்.
பணம் இல்லா நேரத்திலும் துணையாய் வருபவனே உனக்கான உயிர் நண்பன்.
நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, சில நேரங்களில், சில இடங்களில், சில விடயங்களில் முட்டாளாய் இருக்கத் தெரிந்தால்தான் நீங்கள் வாழத் தெரிந்தவர்கள்.
ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதை விட, நல்ல நம்பிக்கையுடன் உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும்.
கவனக் குறைவான வார்த்தை சர்ச்சையைத் தரும், கசப்பான வார்த்தை வெறுப்பை வளர்க்கும், கடுமையான வார்த்தை வாழ்க்கையை முறிக்கும். வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுங்கள். வாழ்க்கை சிறக்கும்..!
சோ. வினோஜ்குமார்,
தொழினுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.