![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/06/29/q3.jpg?itok=4gEkmIYb)
புள்ளிப்பட்டியலிலும் முதலிடம்
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 12வது உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை நடைபெற்ற 33முதற்சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணியே முன்னிலையிலுள்ளது. அவ்வணி இதுவரை 7போட்டிகளில் 6வெற்றி, ஒரு தோல்வியுடன் 12புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ளது. இவ்வரிசையில் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 5வெற்றி, ஒரு தோல்வி, முடிவற்ற ஒரு போட்டி அடங்கலாக 11புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ளது.
கூடிய ஓட்டம்
இத்தொடரில் ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டங்களாக தொடரின் 24வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி பெற்ற 6விக்கெட் இழப்புக்கு 386ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இவ்வரிசையில் அடுத்து கூடிய ஓட்டங்களாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி 5விக்கெட் இழப்புக்கு பெற்ற 381ஓட்டங்களே பதிவாகியுள்ளது. ஒரு போட்டியில் இரு அணிகளும் பெற்ற கூடிய மொத்த ஓட்டமாக தொடரின் 24போட்டியில் பங்களாதேஷ்-−இங்கிலாந்து அணி பெற்ற 724ஓட்டங்களே பதிவாகியுள்ளது.
இதுவரை நடைபெற்று முடிந்த 33போட்டிகளிலும் 17முறை 300ஓட்டங்களுக்குத் தாண்டி அணிகளால் பெறப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் நான்கு முறையும், பங்களாதேஷ் மூன்று முறையும், பாகிஸ்தான், இந்திய அணிகள் இரு முறையும், தென்னாபிரிக்க, மேற்கிந்தியதீவுகள் அணிகள் தலா ஒரு முறையும் 300ஓட்டங்களைக கடந்து பெற்றுள்ளது.
குறைந்த ஓட்டம்
தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் 105ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே இதுவரை குறைந்த ஓட்டமாகப் பதிவாகியுள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணி 125ஓட்டங்களுக்கும், நியூசிலாந்து அணிக்கெதிராக இலங்கை அணி 136ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்ததே அடுத்தடுத்த குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
கூடிய தனி நபர் ஓட்டம்
7போட்டிகளில் 500ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட்வோனர் இம்முறை இதுவரை கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் வரிசையில் முதலிடத்திலுள்ளார். தனி நபர் கூடிய ஓட்டமாகவும் டேவிட் வோனர் பங்களாதேஷ் அணிக்கு எதிராகப் பெற்ற 166ஓட்டங்களே பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணித் தலைவர் அரோன் பின்ஞ் 496மொத்த ஓட்டங்களைப் பெற்று இரண்டாமிடத்திலும், பங்கதேஷ் வீரர் சகீப் அல்−ஹசன் 476ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது இடத்திலுமுள்ளனர்.
கூடிய விக்கெட்
அவுஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்டாக் இதுவரை 7போட்டிகளில் 19விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர் 6போட்டிளில் 16விக்கெட்டுகளையும், இங்கிலாந்தின் ஜோப்ரா ஆச்சர் 16விக்கெட்டுகளைக் கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
சிறந்த பந்து வீச்சுப் பெறுதி
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பங்களாதேஷ் சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் தொடரின் 31வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 29ஓட்டங்களுக்கு 5விக்கெட்களைக் கைப்பற்றியதே சிறந்த பந்து வீச்சுப் பெறுதியாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 30ஓட்டங்களுக்கு 5விக்கெட்டுகளும், நியூசிலாந்தின் ஜிம்மி நீசம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 31ஓட்டங்களுக்கு 5விக்கெட் கைப்பற்றியதுமே அடுத்தடுத்து சிறந்த பந்து வீச்சுப்பெறுதியாக உள்ளது.
சிறந்த இணைப்பாட்டம்
பங்களாதேஷ் அணிக்கு எதிராக அவுஸ்திரேலிய வீரர்களான டேவிட் வோனரும் உஸ்மான் கவாஜாவும் இரண்டாவது விக்கெடடுக்காக 192ஓட்டங்களைப் பெற்றனர். இதுவரை இதுவே இத் தொடரின் சிறந்த இணைப்பாட்டமாகும். பங்களாதேஷ் வீரர்களான சகீப் அல் ஹசனும் லிட்டன் தாஸும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 189ஓட்டடங்களும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர்களான ஜோ ரூட்- இயன் மோர்கன் பெற்ற 189ஓட்டங்களுமே அடுத்த கூடிய இணைப்பாட்டங்களாகும்.
சிறந்த விக்கெட் காப்பு
இதுவரை அதிக ஆட்மிழப்புக்கு துணை போயுள்ள விக்கெட் காப்பாளர்களில் அவுஸ்திரேலிய அணி வீரர் அலெக்ஸ் கேரி 7போட்டிகளில் 14பிடிகளையும் ஒரு ஸ்டம்பிக்கையும் செய்து மொத்தமாக 15ஆட்டமிழப்புகளை செய்து முதலிடத்திலுள்ளார். மேற்கிந்தியதீவுகள் அணியின் ஷெய் ஹோப் மற்றும் நியூசிலாந்து வீரர் டொம் லெதம் இதுவரை 12ஆட்டமிழப்புகளை செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் பெறுபேறுகள் சுருக்கமாக
1வது போட்டி
104ஓட்டங்களா இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து 311/8 (50ஓவர்)
தென்னாபிரிக்கா- 207 (39.4ஓவர்)
2வது போட்டி
மேற்கிந்தியத்தீவுகள் 7விக். வெற்றி
பாகிஸ்தான் – 105 (25.4ஓவர்)
மே. இ.தீவுகள் -108/3 (13.2)
3வது போட்டி
நியூசிலாந்து 10விக்கெட் வெற்றி
இலங்கை- 136 (29.2)
நியூசிலாந்து- 137 (16.2)
4வது போட்டி
அவுஸ்திரேலியா 7விக்கெட் வெற்றி
ஆப்கானிஸ்தான்- 207 (38.2)
அவுஸ்திரேலியா- 209/3 (34.5)
5வது போட்டி
பங்களாதேஷ் 21ஓட்டங்களால் வெற்றி
பங்களாதேஷ்- 330/6 (50)
தென்னாபிரிகா- 309/8 (50)
6வது போட்டி
பாகிஸ்தான் 14ஓட்டங்களால் வெற்றி
பாகிஸ்தான்- 348/8 (50)
இங்கிலாந்து- 334/9 (50)
7வது போட்டி
இலங்கை 34ஓட்டங்களால் வெற்றி
(டக்வேர்த் லுவிஸ்)
இலங்கை- 201 (36.5)
ஆப்கானிஸ்தான்- 152 (32.4/ 41)
8வது போட்டி
இந்தியா 6விக்கெட் வெற்றி
தென்னாபிரிக்கா- 227/9 (50)
இந்தியா- 230/4 (47.3)
9வது போட்டி
நியூசிலாந்து 2விக்கெட் வெற்றி
பங்களாதேஷ்- 244 (49.2)
நியூசிலாந்து- 248/8 (47.1)
10வது போட்டி
அவுஸ்திரேலியா 15ஓட்டங்களால் வெற்றி
அவுஸ்திரேலியா- 288(49)
மேற்கிந்திதீவுகள்- 273/9 (50)
11வது போட்டி
இலங்கை-பாகிஸ்தான்
(கைவிடப்பட்டது)
12வது போட்டி
இங்கிலாந்து 106ஓட்டங்களால் வெற்றி
இங்கிலாந்து- 386 (50)
பங்களாதேஷ்- 280 (48.5)
13.வது போட்டி
நியூசிலாந்து 7விக்கெட் வெற்றி
ஆப்கானிஸ்தான்- 172 (41.1)
நியூசிலாந்து- 173/3 (32.2)
14வது போட்டி
இந்தியா 36ஓட்டங்களால் வெற்றி
இந்தியா- 352/5 (50)
அவுஸ்திரேலியா-316 (50)
15வது போட்டி
தென்னாபிரிக்கா- மேற்கிந்தியத்தீவு
(கைவிடப்பட்டது)
16வது போட்டி
இலங்கை- பங்களாதேஷ்
(கைவிடப்பட்டது)
17வது போட்டி
அவுஸ்திரேலியா 41ஓட்டங்களால் வெற்றி
அவுஸ்திரேலியா -307 (49)
பாகிஸ்தான்- 266 (45.4)
18வது போட்டி
இந்தியா- நியூசிலாந்து
(கைவிடப்பட்டது)
19வது போட்டி
இங்கிலாந்து 8விக்கெட் வெற்றி
மேற்கிந்தியத்தீவுகள்- 212 (44.4)
இங்கிலாந்து- 213/2 (33.1)
20வது போட்டி
அவுஸ்திரேலியா 87ஓட்டங்களால் வெற்றி
அவுஸ்திரேலியா- 334/7 (50)
இலங்கை-247 (45.5)
21வது போட்டி
தென்னாபிரிக்கா 9விக்கெட் வெற்றி
(டக்வேர்த் லுவிஸ்)
ஆப்கானிஸ்தான் -125 (34.1)
தென்னாபிரிக்கா- 131/1 (28.4)
22வது போட்டி
இந்தியா 89ஓட்டங்களால் வெற்றி
(டக்வேர்த் லுவிஸ்)
இந்தியா- 335/5 (50)
பாகிஸ்தான் (212 (40)
23வது போட்டி
பங்களாதேஷ் 7விக்கெட் வெற்றி
றேகிந்தித்தீவுகள் -321/8 (50)
பங்களாதேஷ்- 322/3 (41.3)
24வது போட்டி
இங்கிலாந்து 150ஓட்டங்களால் வெற்றி
இங்கிலாந்து -397/5 (50)
ஆப்கானிஸ்தான் 247/7 (50)
25வது போட்டி
நியூசிலாந்து 4விக்கெட் வெற்றி
தென்னாபிரிக்கா- 241/6 (50)
நியுசிலாந்து- 245/6 (48.3)
26வது போட்டி
அவுஸ்திரேலியா 48ஓட்டங்களால் வெற்றி
அவுஸ்திரேலியா- 381/5 (50)
பங்களாதேஷ் -333/8 (50)
27வது போட்டி
இலங்கை 20ஓட்டங்களால் வெற்றி
இலங்கை- 232/9 (50)
இங்கிலாந்து- 212 (47)
28வது போட்டி
இந்தியா 11ஓட்டங்களால் வெற்றி
இந்தியா- 224/8 (50)
ஆப்கானிஸ்தான்- 212 (49.5)
29வது போட்டி
நியூசிலாந்து 5ஓட்டங்களால் வெற்றி
நியூசிலாந்து-291/8 (50)
மேற்கிந்தியத்தீவுகள்-285 (49)
30வது போட்டி
பாகிஸ்தான் 49ஓட்டங்களால் வெற்றி
பாகிஸ்தான் -308/7 (50)
தென்னாபிரிக்கா-259/9 (50)
31வது போட்டி
பங்களாதேஷ் 62ஓட்டங்களால் வெற்றி
பங்களாதேஷ்-262/7 (50)
ஆப்கானிஸ்தான் 200 (47)
32வது போட்டி
அவுஸ்திரேலியா 64ஓட்டங்களால் வெற்றி
அவுஸ்திரேலியா-285/7 (50)
இங்கிலாந்து 221 (44.4)
33வது போட்டி
பாகிஸ்தான் 6விக்கெட் வெற்றி
நியூசிலாந்து- 237/6 (50)
பாகிஸ்தான்- 241/4 (49.1)