நில நடுக்கம் ஏற்படுவதேன்..? | தினகரன் வாரமஞ்சரி

நில நடுக்கம் ஏற்படுவதேன்..?

பூமியானது கெட்டிப் பொருளல்ல. உள்ளே பாறைக்குழம்பு இன்னும் திரவ நிலையில் இருக்கிறது. மேற்பகுதி பாறையாக உள்ளது. இது இருபது அடுக்குகளைக் கொண்டது. உள்ளேயிருக்கும் திரவத்தின் மீது இவை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு நகரும்போது இரண்டு அடுக்குகளின் முனைகள் சில சமயம் முட்டிக்கொள்ள நேரிடுகிறது. அப்போது அடுக்குகள் இடம்பெயர்வதாலேயே நில நடுக்கம் உண்டாகிறது.

இவ்வாறு மோதல் நேருமிடம் ஃபோகஸ் எனப்படும். நிலப்பரப்புக்கு அதிக ஆழத்தில் இவ்வாறு நேர்ந்தால் பெரிய விளைவுகள் ஏற்படாது. ஆனால் 40கி.மீ ஆழத்துக்குள் ஏற்பட்டால் நிலைமை மோசமாகும்.  

உலகில் அதிகமாக நில நடுக்கங்கள் உண்டாகும் இரண்டு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. பசுபிக் கடலிலுள்ள மலைத் தொடர்களையும், தீவுகளையும் கொண்டது முதல் பகுதி. மற்றது தென் ஐரோப்பாவிலும் ஆசியிலும் உள்ளது. கடலுக்கடியிலும் பல நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நில நடுக்கங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் எல்லாமே சேதங்களை ஏற்படுத்துவதில்லை. நடுக்கத்தின் தீவிரம் ஓரளவுக்கு மேல் அதிகரித்தால் ஆபத்து. நகரங்களில் ஏற்பட்டால் அதிக சேதங்களை ஏற்படுத்தும். கட்டங்கள் இடிந்து விழுவதுடன் தீப்பற்றிக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது.  

நில நடுக்கங்களை 'ஸீஸ்மொகிராப்' எனப்படும் ஒரு கருவியினால் அளக்க முடிகிறது. நடுக்கம் எவ்வளவு தீவிரமானது என்பது ரிச்டர் அளவில் குறிப்பிடப்படும்.  

இது தோன்றும் இடத்துக்கு நேர்மேலாக உள்ள பூமியின் பகுதியை எபிசென்டர் என்பார்கள். ஃபோகஸ், எபிசென்டர் ஆகிய இரண்டையும் லீஸ்மோகிராபில் கண்டறிய முடியும். ரிச்டர் அளவில் ஆறுக்கு மேலாக அதிகரித்தால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்.

நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய விதம் இன்னும் கண்டறியப்படவில்லை. கடலுக்கள் ஏற்படும்போது கடல் பொங்கியெழுவதுடன் கரையோரப்பகுதிகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்திவிடும்.  

சுஜானி திருஆலன், 
தரம் 10, வ/மகளிர் உயர்தரப் பாடசாலை, 
வவுனியா.

Comments