![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/07/27/aara-amara.jpg?itok=ZvZ-acdh)
தலைப்பைப் பார்த்ததும், உங்களுக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கும், சாப்பாட்டையா, நாட்டையா? எண்டு. நிச்சயமாக முதலாவதைத்தான். பின்னதை சாப்பிட்டுக்ெகாண்டிருக்கிறார்கள் ஒரு தரப்பினர் என்றதையும் மறுக்கேலாது.
கொழும்புக் குப்பையை வெளியிலை கொண்டுபோய் கொட்டுறம் என்று கொஞ்சகாலமாகப் பெரும் பிரச்சினையாக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். குப்பை என்றதுமே ஒரு காலத்தில் மீத்தொட்டமுல்லைதான் நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு புளுமெண்டல் குப்பை. பிறகு புத்தளம் அறுவாக்காடு குப்பை பிரச்சினை. இப்பிடி குப்பையை வைச்சே சிலர் குப்பை அரசியல் செய்துவந்தார்கள்.
இப்ப குப்பை என்றதும் பிரித்தானியா நினைவிற்கு வருகிறது, கொழும்பு குப்பை போய் இப்ப பிரிட்டிஷ் குப்பை வந்திருக்கிறது. அரசியல் குப்பை ஒரு புறமிருக்க, நாட்டையே குப்பைத் தொட்டியாக்கியிருக்கிறார்கள் என்று விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக, இலங்கையில் எந்தப் பொருளையும் புதிதாக உற்பத்தி செய்ய முடியாவிட்டாலும், பழையதை உருமாற்றிப் புதிதாக்குவதற்குக் கெட்டிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பார் நண்பர். வௌிநாடுகளில் பழைய கார்களை இறக்குமதி செய்து அவற்றைப் புத்தம் புதிதாக்கி விற்பனை செய்வதைப் பார்த்தால் தெரியவில்லையா? பழைய பஸ் வண்டிகளைப் புதிதாக்குவதையெல்லாம் காணவில்லையா? என்று கேட்பார்.
அப்பிடித்தான் தற்போது பிரித்தானியாவிலிருந்து (இலண்டனிலிருந்து) குப்பைகள் வந்துள்ளன. பழைய மெத்தைகள், இறப்பர் கம்பளங்கள் போன்றவற்றைப் புதிதாக்கித் திருப்பியனுப்புவதற்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், அவற்றில் ஆஸ்பத்திரிக் கழிவுகளும் இருப்பதாக ஓர் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆஸ்பத்திரி கழிவுகளோடு மனித எச்சங்களும்கூட இருக்கிறதாகக் கதை. அதனாலதானோ என்னவோ, கன்ரேனர் உள்ள இடத்திலை ஒரே நாற்றமென்றும் சொல்கிறார்கள். இருந்தாலும், இதுவிடயமாகப் பாராளுமன்றத்திலையோ இல்லாட்டிக்கு நாட்டிலையோ பெரிசா இன்னும் மணக்கவில்லை.
இப்ப இந்தக் குப்பைக் கன்ரேனர்களை வெளியிலைக் கொண்டுபோறதுக்கு விடமாட்டோம் என்று சட்ட மாஅதிபர் சொல்லியிருக்கிறார். எப்பிடி வைச்சிருக்க ஏலுமோ தெரியேல்ல. ஏனெண்டால், திறந்து பார்த்துச் சோதனை செய்வதற்கே முடியாத அளவிற்கு நாற்றம் அடிப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. உள்நாட்டுக் குப்பை பிரச்சினையே தீராத நிலையில், வெளிநாட்டுக் குப்பை வேறு!
மெத்தை, ஆஸ்பத்திரிக் கழிவுகளைத் திருப்பியனுப்புறதாக அரசாங்கம் சொல்லியிருக்குது, பரவாயில்லை. இதேவேளை, இதே வேலை உள்நாட்டிலும் நடக்குது! என்னடா என்று யோசிப்பீங்கள்! உண்மையான கதை. எலக்ேரானிக் பொருள் விற்பனை செய்யிற கடைகள்ல, பார்த்தீர்கள் என்றால், உங்களிடமுள்ள பழைய தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ், சலவை இயந்திரம் எல்லாத்தையும் குடுத்தீங்கள் என்றால், அதுக்கு ஏற்றமாதிரி உங்களுக்குப் புதிய பொருள்களுக்குக் கழிச்சுக்ெகாண்டு குடுப்பாங்கள்; குடுக்கிறாங்கள். பிறகு நீங்கள் குடுத்த அந்தப் பழைய பொருள், மீண்டும் புத்துயிர் பெற்று வேறொருவரின் தலையில் கட்டப்படும். இப்பிடி ஒரு நண்பர் மாட்டியிருக்கிறார்.
அவர் வாங்கின எல்ஈடி ரிவியிலை மதர்போர்ட் அடிச்சுப்போச்சாம். அதைத் திருத்திறதுக்குக் கொண்டுபோயிருக்கிறார். அப்போது பார்த்தால், அந்த மதர்போர்ட் அந்த ரிவிக்கு உரியது இல்லை; வேறொரு ரிவியிலை இருந்து சுட்டுப்போடப்பட்டிருக்கிறது என்று திருத்துநர் சொல்லியிருக்கிறார். எப்பிடி இருக்குது கதை. நாங்கள் கொண்டுபோய் குடுக்கிற பழைய ரிவிகள்ல ஒரு ரிவியிலையிருந்துதான் அந்த மதர் போர்ட் கழற்றப்பட்டிருக்க வேண்டும்.
கிட்டடியிலை திறந்துவைக்கப்பட்டுள்ள ஒரு பிரபல கடையிலை ஒரு 'போர்ட்' இருக்கிறது. "உங்களிடமுள்ள பழைய இலத்திரனியல் குப்பைகளைக் கொண்டு வந்து கொடுக்கலாம்" என்பதுதான் அந்த அறிவிப்பு.
அதென்ன இலத்திரனியல் பழைய குப்பை?
கம்பியூற்றர், லெப்டப், பழைய ரீவிகள் இத்தியாதி...இத்தியாதி என எழுதியிருக்கிறார்கள். பிறகு இவையெல்லாம், புத்தம்புது பொருள்களாக மீண்டும் கடைக்கு வந்து வீடுகளுக்குச் செல்லும். அதனால், நண்பர் சொல்கிறார், எந்தப் பழைய பொருள்களையும் திருப்பிக்ெகாண்டுபோய் கொடுக்காதீர்கள் என்று.
ஒரு கடையில் குளிர்பானம் குடித்தால்கூட மீதம் வைக்காமல் குடிக்க வேண்டும். தின்பண்டங்கள், உணவுப் பண்டங்களையும் மீதம் வைக்கக்கூடாது. ஏனென்றால், அவை மீண்டும் மேசைக்கு வந்துவிடலாம். சிலபேர் மரியாதைக்காகச் சாப்பாட்டை மீதம் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். இப்பிடியான கடைகளில், வாடிக்ைகயாளர்கள் மீதம் வைத்த உணவுப் பொருள்களை நாய்களுக்ெகன்று பணத்திற்கு விற்கிறார்கள். அதுவென்றாலும் போகட்டும். அந்தப் பொருள்களில் ஏதாவது மீண்டும் விற்கப்பட்டால் என்ன செய்வது, பொலிஸ் கொத்துவைப்போல? என்று கேட்கிறார் நண்பர். வாடிக்ைகயாளர்கள் மீதம் வைத்துச் செல்கின்ற கொத்து ரொட்டியைச் சேகரித்து வைத்துப் பொலிஸ் கொத்து கொடுக்கப்பட்டதைத் தாம் நேரில் கண்டதாகச் சொல்கிறார் நண்பர்.
சில கடைகளுக்குச் சென்றதும், "டேய் தம்பி, ஐயாவை நல்லாக் கவனி, அம்மாவைக் கவனி! என்று சொன்னால், ஆப்பு வைக்கப்போகிறார்கள் என்று அர்த்தம் என்கிறார் அவர். பொதுவாகச் சாப்பாட்டுக் கடைகளில்தான் இந்தக் கவனிப்பாம். சில ரெஸ்டூரண்டுகளில், வழங்கும் தேநீர் சரியில்லை, மீண்டும் நன்றாகப் போட்டுக்ெகாண்டு வாருங்கள் என்று திருப்பிக்ெகாடுத்தனுப்பினால், அதில், எச்சிலைத் துப்பிக்ெகாண்டு சென்றதைக் கண்ணால் கண்டிருக்கின்றேன் என்று அடித்துச் சொல்கிறார் நண்பர். இப்பிடி எல்லா இடத்திலும் நடக்காது. அதற்குத்தான் சாப்பிடச் சென்றால், எந்த உணவையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு வந்துவிட வேண்டும். அல்லது நீங்களே அதனைக் குப்பைத் தொட்டியில் சிதைத்துப் போட்டுவிட்டு வரவேண்டும் என்பது நண்பரின் அறிவுரை! குப்பையைக் கிளறினால், குப்பை குப்பையாகத்தான் வரும் என்பது சரிதான்!