![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/28/q1.jpg?itok=VdLhRqfW)
தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையைக் கொண்ட தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி கொழும்பு மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 7வருடங்களில் இது தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
356மீற்றர் உயரமான இந்த கோபுரம் உலகில் 19ஆவது உயரமான கோபுரமாக காணப்படுகின்றது. கொழும்பு, டி.ஆர். விஜயவர்தன மாவத்தையிலுள்ள பேர வாவியை அண்மித்துள்ள இந்த கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600சதுர அடி என அளவிடப்பட்டுள்ளது.
சுமார் 200வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் காணப்படுகின்றது. 8மின் தூக்கிகளைக் கொண்ட இந்த கோபுரத்தில் நொடிக்கு 7மீற்றர் உயரும் இலங்கையின் முதலாவது வேகமான மின் தூக்கியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையால் இலங்கையின் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் இனிவரும் காலங்களில் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமீரா பாஸி,
தரம் 06A, களு/இல்மா மு.வித்தியாலயம்,
அம்பலந்துவை,
பாணந்துறை.