வேலை நிறுத்தப் போராட்டம் என்பது ஓர் இறுதி ஆயுதம் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது அது ஒரு மழுங்கடிக்கப்பட்ட ஆயுதமாக்கப்பட்டிருக்கின்றது. தொட்டதற்கெல்லாம் வேலைநிறுத்தம், போராட்டம். இப்படியான போராட்டங்கள் பல இலங்கை வரலாற்றில் மறக்கேலாது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அம்பத்து மூண்டு. எண்பது...என்று சொல்லிக்கொண்டு போகலாம். எண்பதாம் ஆண்டு நடந்ததுதான் பெரிய வேலைநிறுத்தப்போராட்டம். ஆனால், ஒண்டையும் பிடுங்கேலாமத்தான் போச்சு. ஆயிரக்கணக்கான ஆட்களுக்கு வேலை இல்லாமல் போனதுதான் மிச்சம். நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தாப்பிறகு சிலருக்கு அதிலை நிவாரணம் கிடைச்சிருக்கு. அப்பிடித்தான் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினாவுக்கும் கிடைச்சது. கிட்டத்தட்ட ஒரு கோடி வரை நட்ட ஈடு கிடைச்சதா கேள்வி. சரியான தொகை தெரியாது!
அடுத்து வேலை நிறுத்தம் செய்றதிலை பெயர் எடுத்த ஆட்கள் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களும் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் என்று போராட்டம் நடத்தி, இறுதியிலை ஒண்டையும் பெற்றுக்ெகாள்ளேல்ல. இழந்ததுதான் அதிகம்.
இப்ப எங்கடை ரீச்சர்மார், அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், ரயில்வே சாரதிகள் எல்லாரும் சேர்ந்து ஸ்ரைக் பண்ணியிருக்காங்கள். ரயில்வே சாரதிகள் நடத்திற போராட்டம் அநியாயமானது என்றுதான் சொல்கிறார்கள். இலட்சக்கணக்கான சம்பளத்தையும் பெற்றுக்ெகாண்டு இப்படி பயணிகளைத் துன்புறுத்துறது நியாயமில்லை என்கிறார்கள். அரசாங்கமும் அதைத்தான் சொல்லுது.
அதேநேரம், ரயில்வே துறையில் உள்ள ஏனைய பிரிவு ஊழியர்கள் வாழ்க்ைகயில் பெரும் கஷ்டத்தை அனுபவிப்பதாகச் சொல்கிறார்கள். ரயில்வே துறை ஒன்றிணைந்த சேவையாக இருப்பதால், சம்பளவுயர்வின்போது ஏற்றத்தாழ்வு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். அதனால தற்போது ரயில்வே துறை ஒரு மூடிய (வரையறை செய்யப்பட்ட) சேவையாக மாற்றப்படவிருக்கிறது. அப்படியென்றால், ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்றமாதிரி சம்பளத்தைத் தீர்மானித்துக்ெகாள்ளேலும். சரி, வரையறை விட்ட சேவை என்றால் என்ன?
புகையிரத திணைக்கள சேவைகளை வரையறை சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வாறே ஆசிரியர் சேவையையும் வரையறை சேவையாக மாற்றுவதற்கு அமைச்சரவை உடன்பட்டுள்ளது.
உண்மையில், அரச சேவை பல வகைப்பட்டது.
ஒன்றிணைந்த சேவை
அரச முகாமைத்துவ சேவை ஒன்றிணைந்த சேவையாகும். இச்சேவையில் உள்ளவர்கள் எந்தத் திணைக்களத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் இடமாற்றம் பெற முடியும்.
நாடளாவிய சேவை
நாடளாவிய சேவை இன்னொரு வகையாகும். இலங்கை நிர்வாக சேவை உட்பட்ட 12 நாடளாவிய சேவைகள் இதில் அடங்குகின்றன. இச்சேவையிலுள்ளவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சேவையில் ஈடுபட முடியும். இதில் மாகாண தேசிய நிறுவன வரையறைகள் எதுவும் காணப்படமாட்டாது.
மாகாணப் பாடசாலை ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெறுவதற்கு பல தடைகள் உள்ளன. ஆனால், நாடளாவிய சேவையில் உள்ளவர்களுக்கு இந்த வரையறை இல்லை.
வரையறை சேவை
சம்பளம், பொது நலன்கள் மற்றும் சேவை தரப்பண்பு ஆகிய அம்சங்கள் இவ்வகைச் சேவையில் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றன.
6/2006 இலக்க சுற்று நிருபம் அனைத்து அரச சேவைகளையும் பொது வியூகமொன்றினுள் கொண்டுவருகின்றது. இதன் மூலம் அரச சேவைகள் ஒன்றுக் கொன்று தொடர்பு படுகின்றது. சில தொழில்கள் சமப்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக ஒரு தொழில் துறைக்குச் சம்பளத்தை அதிகரிக்கும் போது அதனோடு தொடர்பான அல்லது சமமான ஏனைய துறைகளின் பணியாளர்களுக்கும் சம்பளத்தை அதே அளவில் அதிகரிக்க வேண்டும். இல்லையேல் சம்பள முரண்பாடு தோன்றும். தற்போது நடைபெறும் சம்பள முரண்பாட்டின் பின்னணி இதுதான் என்று விளக்குகிறார் இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்.
ஓர் அரச சேவையை வரையறை சேவையாகப் பிரகடனப்படுத்தும் போது, அந்தச் சேவை தனியாக நோக்கப்பட்டுச் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தீர்மானிக்க முடியும். அது சுயாதீனத் தன்மை கொண்டது. உதாரணமாக ஆசிரியர் சேவையில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. இங்கு மேலதிக நேர வேலைக் கொடுப்பனவு, 'பட்டா' கொடுப்பனவு முதலானவை எதுவும் இல்லை. எனவே, மேலதிக வருமானம் ஈட்ட முடியாது. ஆசிரியர்கள் அதிகமானவர்களின் சம்பளம் 29000,-33000இற்கு இடைப்பட்டதாகும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் நாளொன்றுக்கு 1,000 ரூபா அளவிலே சம்பளமாக பெறுகின்றனர். அதனால், இந்த நிலையைக் கருத்திற்கொண்டு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு 2007 ஆம் ஆண்டு ஆசிரியர் சங்கங்கள் மேற்கொண்ட தொழில் சங்க நடவடிக்கைகளின் போது உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்கள சேவையை மாத்திரமன்றி ஆசிரியர் சேவையையும் வரையறை சேவையாக அறிவிக்க ஒக்டோபர் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கேற்ப, அஃது அரச சேவையின் பொது வியூகத்தில் அடங்காது. அதன் மூலம் அச்சேவையின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் மற்றய துறைகளைத் தங்கியிருக்காது என்கிறார் ஸ்டாலின். எப்பிடியோ, ஆசிரியர்களுக்கு 23 சம்பள உயர்வுகள் பாக்கியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் ஏன் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். எவ்வாறெனினும், ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை எந்த விதத்திலும் ரயில்வே சங்கத்தினருடன் ஒப்பிட முடியாதென்பது மட்டும் உண்மை.