![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/05/q1.png?itok=4sgdGgWG)
அறுகம்பையில் நடைபெற்ற கடலலை சறுக்கல் உலக லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவின் பாகின்சன் 2019ம் ஆண்டுக்கான இலங்கையில் நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டினார்.
இப்போட்டியில் பங்குபற்றிய உலகின் பல நாடுகளில் இருந்து 124க்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். 2012ம் ஆண்டு உலகக் கிண்ண வீரர் ஜொயல் பாகின்சனின் இளைய சகோதரராவார்.
இந்தோனேசியாவின் ஒன்ரி அன்வர் இவருடன் கடுமையாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். மிச் பாகின்சன் அறுகம்பை கடலில் 3அடி தொடக்கம் 4அடி உயரமான அலைகளில் சறுக்கி தன் திறமையை வெளிப்படுத்தினார்.
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டின் உள்ளூர் போட்டியாளராக கலந்துகொண்ட பாகின்சன் எல்லா பிரிவுகளிலும் பெரும் போட்டியை எதிர்நோக்கி இறுதி சுற்றுக்கு தெரிவானார்.
பாகின்சன் தன்னுடன் போட்டியிட்ட ஒன்ரி அன்வருக்கு (ஐ. டீ. என்) இரண்டு அலைகளிலும் 19.17புள்ளிகளை பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது இலகுவன சவாலல்ல. கடல் அலைச் சறுக்கல் உலகக் கிண்ண ஆண்களுக்கான போட்டி 2019செப்டம்பர் மாதம் 25ம்திகதி தொடக்கம் 29ம் திகதி வரை அறுகம்பையில் நடைபெற்றதோடு அது கடல் அலைச் சறுக்கல் போட்டிக்கு உலகில் மிக சிறந்த இடமாகும்.
இங்கு போட்டியை காண பல்வேறு நாட்டு ரசிகர்கள் கலந்து கொண்டது. மட்டுமல்லாமல் உள்ளூர் ரசிகர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும் இந்தப் போட்டியை இலங்கை கடலலைச் சறுக்கல் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.இலங்கையிலுள்ள அதிகளவான கடலைச்சறுக்கல் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை சர்வதேச வீரர்கள் முன்னிலையில் வெளிக்காட்டிருந்தனர்.
அறுகம்பை பிரதேசம் சர்வதேச கடலலைப் போட்டிகளை நடத்துவதற்கு உகந்த இடம் என்பதை இந்த போட்டிகளை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்ட முனையும் விளையாட்டுக்கள் மூலம் இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியை அதிகரிக்க செய்ய முடியும் என தனது நிறுவனத்தின் ஊடாக செய்யும் நபர் திலக் வீரசிங்க குறிப்பிடுகிறார்.லங்கா ஸ்போர்ட் ரைஸன் நிறுவனம் மூலம் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்ளூர் வீரர்களை கொண்டு நடத்தும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை இலங்கையில் ஒழுங்கு படுத்தி கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தனது பங்களிப்பை செய்து வருகிறார்.கொழும்பு மரதன்,ரீ கப் சைக்கிளோட்ட போட்டி , கடலலை நீர்ச்சறுக்கல் போட்டி என்பனவாகும்.இலங்கை ஒரு அழகிய நாடு.இந்த நாட்டியில் அனைத்து வகையான விளையாட்டு நிகழ்வுகளையும் சரியாக திட்டமிட்டு செய்தால் வருடத்தின் அனைத்து பகுதியிலும் விளையாட்டு நிகழ்வு இடம்பெறும் நாடாக இலங்கை மாறினால் உள்ளாச பயணிகள் வருகை அதிகரிக்கும் அதனால் எமது நாடு பொருளாதார ரீதியில் வலுப் பெறும். நான் மட்டும் விளையாட்டுத்துறைக்கு பங்களிப்பு வழங்கினால் போதாது நாட்டிலுள்ள அனைவரும் .பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும்.எமது நாடு பொருாளதார ரீதியில் முன்னேற்றம் அடையும்.
நாங்கள் அடுத்த வருடம் பெப்ரவரி முதல் தென்பகுதியில் இவ்வகையான கடலலை நீர்ச்சறுக்கல் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை சுற்றுலா பணியகம்,ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தது.
இறுதி நாள் நிகழ்வுக்கு அமைச்சர்களான ஜோன் அமரதுங்க,தயா கமகே மற்றும் லங்கா ஸ்போர்ட் ரைசன் தலைவர் திலக் வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்த போட்டி இடம்பெற்ற 10நாட்கள் காலப்பகுதியில் பொத்துவில் -அறுகம்பை பிரதேசத்தில் உல்லாச பயணிகள் அதிகளவானவர்கள் படையெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர். பரீத்