![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/02/q8.jpg?itok=myWKOKzh)
OPPO Reno2 F இன் முதல் விற்பனையை கொழும்பு லிபர்டி பிளாஸாவில் ஆரம்பித்திருந்தது. புதிய Reno2 F தெரிவு என்பது புகைப்படக்கலைத் திறன் படைத்தது என்பதுடன், quad- கமரா கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 MP Ultra-clear பிரதான கமரா, 8 MP Wide Angle லென்ஸ், 2 MP Mono லென்ஸ் மற்றும் 2 MP Portrait லென்ஸ் போன்றன காணப்படுகின்றன.
இந்த தொலைபேசியை கொள்வனவு செய்த முதல் சில வாடிக்கையாளர்களுக்கு, ரவீன் கனிஷ்க மற்றும் வினு சிறிவர்தன ஆகியோர் அவர்களுக்கான புதிய சாதனைகளை கையளித்திருந்தனர். இதன் போது அங்கு விஜயம் செய்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் சொப்பிங் செய்தோர், இந்த பிரபலங்களுடன் selfie எடுத்து மகிழ்ந்ததுடன், சகல வாடிக்கையாளர்களுக்கும் OPPO வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட பொதி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது.
புகழ்பெற்ற பாடகரும், நடிகருமான ரவீன் கனிஷ்க இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், நான் நீண்ட காலமாக OPPO ரசிகனாக உள்ளேன். OPPO Reno2 F ஊடாக வழங்கப்படும் புதிய உள்ளம்சங்களான நவீன கமரா மற்றும் புகைப்படக்கலைத் திறன் போன்றன பாவனையாளருக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. உதாரணமாக, ultra-clear night shots களினூடாக வெளிச்சம் இல்லாத சூழல்களிலும் Reno2 F இனால் சிறந்த தெளிவான படங்களை எடுத்துக் கொள்ள முடியும்“ என்றார்.