புகையிரத நிலைய சுத்திகரிப்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

புகையிரத நிலைய சுத்திகரிப்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தனது 20வருட பூர்த்தியை முன்னிட்டு,கழிவுகளை அகற்றுவோம் எனும் தொனிப் பொருளில் புகையிரத நிலையங்களை சுத்திகரிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. வங்கி முன்னெடுக்கும் பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளின் மற்றுமொரு அங்கமாக இது அமைந்துள்ளது. 

கொழும்பு கோட்டை, நுகேகொட, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, அளுத்கமை, அம்பலாங்கொட, ஹிக்கடுவ, காலி மற்றும் மாத்தறை ஆகிய புகையிரத நிலையங்களில் கழிவுகளை வேறுபடுத்தி இடக்கூடிய வாளிகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் ஊழியர்கள் நிறுவியுள்ளனர்.  

கழிவு அகற்றல் செயற்பாடுகளை சிறந்த வகையில் கட்டுப்படுத்துவதற்கு நிலைபேறான செயற்பாடுகளை வங்கி முன்னெடுத்து வருவதுடன், பொது மக்களுக்கு மீள்சுழற்சி மற்றும் பொறுப்பு வாய்ந்த வகையில் கழிவகற்றும் முறை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.   

Comments