![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/16/a10.jpg?itok=H2VK9XAe)
இலங்கையின் போட்டிமிகு சலவைத்துறை சந்தையில் முதன் முதலாக, ஆனால் மிக வலுவாகத் தடம் பதிக்கிறது. இது பன்முகப்படுத்தப்பட்ட குடும்ப வர்த்தகக் கூட்டமைப்பான வரையறுக்கப்பட்ட ஓக்ஸி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் தயாரிப்பாகும். இது ஸ்டாண்டர்ட் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் கீழ் சுயாதீனமாய் இயங்கும் ஒரு அங்கமாகத் திகழ்கிறது.
கொழும்பு 06வட இந்திய உணவகமான சானாவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின்போது, ‘பியூரா மிகவும் கோலாகலமான முறையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, ‘ஓக்ஸி ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இக்பால் வலிமொஹாமட், பிரதம நிறைவேற்று அதிகாரி வலி மொஹமட் இக்பால், பிரதம நிறைவேற்று இயக்குனர் அத்னான் இக்பால, பிரதம நிதிவள அதிகாரி இக்ரம் பைஸ் மற்றும் தலைமை முகாமையாளர் நவஃல் நூர்தீன் போன்றோர் நிறுவனத்தின் தலைமை மற்றும் முகாமைத்துவம் சார்பில் பங்கேற்றிருந்தனர். துரித வளர்ச்சி கண்டு வரும் ஓக்ஸி ஹோல்டிங்ஸ்’ குழுமம் அதன் வலுவான கூட்டாண்மை அடித்தளத்தின் துணையுடன் பயணிக்கும் அதேவேளை, சலவைத்துறையிலும் தனது தனித்துவத்தை மேம்படுத்தும் வகையில் செயற்பாட்டை விஸ்தரித்துள்ளது. ஏற்கனவே தனது ஏனைய தயாரிப்புகளான துணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனக் கலவைகள், உணவுப் பொதியிடல் தயாரிப்புகள், PVC தகடுகள், சுவரலங்காரத் தாள்கள்.
வீட்டு அலங்காரம் மற்றும் உட்கட்ட அலங்காரப் பொருட்கள் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தடம் பதித்துள்ள இந்நிறுவனம் சலவைத்துறையிலும் தனது பெயரைப் பொறித்திருப்பது விசேட அம்சமாகும்.