இனிதே நிறைவுற்ற Big Bad Wolf Book விற்பனை 2019 | தினகரன் வாரமஞ்சரி

இனிதே நிறைவுற்ற Big Bad Wolf Book விற்பனை 2019

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் இலங்கையின் இதமான கரையை எட்டிய Big Bad Wolf Book விற்பனை, உலகின் மிகப் பாரிய புத்தக விற்பனை என்ற தனது பெயரை நிலைநாட்டியவாறு நாட்டில் ஏனைய அனைத்து புத்தக விற்பனை நிகழ்வுகளையும் விட மிகப் பிரமாண்டமான ஒன்றாக மீண்டும் ஒரு முறை இனிதாக நிறைவுற்றுள்ளது. 11தினங்கள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதுடன், 1.5மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கப்பெற்றன. புத்தக ஆர்வலர்கள் அனைவரினதும் கனவுகளை நனவாக்கி, பெருந்தொகையான Wolf Pack அங்கத்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியவாறு Big Bad Wolf Book விற்பனை நிகழ்வு இலங்கையிலிருந்து விடை பெற்றுள்ளது.  

Big Bad Wolf Book கொழும்பு 2019விற்பனை நிகழ்வில் 250,000இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், கிராஃபிக் நாவல்கள், வரலாறு, சுய உதவிக்கான சுயசரிதைகள் மற்றும் சமையல் புத்தகங்கள் என தமது புத்தக இராக்கையில் மீண்டும் புத்தகங்களை அடுக்கிக் கொள்வதற்கு ஆவலுடன் காத்திருந்த அவர்கள், தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை முண்டியடித்துக் கொண்டு கொள்வனவு செய்துள்ளனர்.

இலங்கையில் அனைத்து வயது மட்டங்களையும் சார்ந்த புத்தகப் பிரியர்கள், விற்பனை நிகழ்வில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளதுடன், தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தகங்களை வாங்கியுள்ளனர். அத்துடன் றுழடக புத்தக விற்பனை நிகழ்வு இலங்கைக்கு வருகை தரும் வரை தங்களுக்கு பரீட்சயப்பட்டிராத ஏனைய பல புதிய புத்தகங்களையும் அவர்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்து வாங்கியுள்ளனர்.  

புத்தக விற்பனை நிகழ்வுக்கு வருகை தந்த பார்வையாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பட்டியலில் இருந்த புத்தகங்களை வாங்கியது மட்டுமன்றி, Big Bad Wolf Book விற்பனையின் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு அங்கமான Red Readerhood (RRH) இற்கும் தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கியுள்ளனர்.

Comments