![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/14/q12.jpg?itok=Yyh41oi9)
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (Information and Communication Technology Agency of Sri Lanka - ICTA) ஏற்பாடு செய்துள்ள ‘’Sri Lanka Go Digital” என்ற டிஜிட்டல் வளர்ச்சி மாற்றம் மற்றும் அதனை உள்வாங்கிக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக 253பிராந்திய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளைச் சார்ந்த தொழில் முயற்சியாளர்கள் அறிவூட்டப்பட்டு, வலுவூட்டப்பட்டு, தமது வர்த்தக முயற்சிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் தொடர்பான சிறந்த அறிவைப் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வின், இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்டமானது ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது.
தொழில் முயற்சியாளர்களுக்கு தம் சமூகத்தின் அடிமட்டத்திற்கு செய்தியை எடுத்துச் செல்லும் ஆற்றல், இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த 30அபிவிருத்தி மற்றும் பிராந்திய அலுவலர்களின் மூலமாக வழங்கப்பட்டது.
புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியவர்கள் அறிந்து கொண்டதுடன், தமது வர்த்தக முயற்சிகளில் உள்வாங்கக்கூடிய புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ற தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை இனங்கண்டு சந்தித்துக் கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு தமது உள்நாட்டு சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு இது சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக பெற்றுக்கொண்ட விலைமதிப்பற்ற அறிவினூடாக தொழில்நுட்பம் சாராத தொழிற்துறைகளின் கேள்விகளையும் பூர்த்தி செய்ய முடிகின்றது.
அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்ற பயிற்சி அமர்வுகளின் மூலமாக அது முற்றிலும் புதியதொரு மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள இந்த ஆண்டு நிகழ்ச்சித்திட்டத்தில், முகநூல் மற்றும் Google உடன் தொடர்புபட்ட வர்த்தக கருவிகளை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது என்பது தொடர்பான நேரடி அனுபவத்தையும் பங்குபற்றியோர் பெற்றுள்ளனர்.