“ஆண்டின் சிறந்த ஆசிய சந்தைப்படுத்தல் நிறுவனமாக CBL மஞ்சிக்கு விருது | தினகரன் வாரமஞ்சரி

“ஆண்டின் சிறந்த ஆசிய சந்தைப்படுத்தல் நிறுவனமாக CBL மஞ்சிக்கு விருது

பெருமளவானோர் அதிகளவு விரும்பும் மஞ்சி பிஸ்கட் உற்பத்தியாளரான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட், தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக, ஆண்டின் சிறந்த ஆசிய சந்தைப்படுத்தல் நிறுவனம் 2019விருதை சுவீகரித்துள்ளது.

சீனாவின், தய்பெய் நகரில் இடம்பெற்ற ஆசிய சந்தைப்படுத்தல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஆசியாவில் புகழ்பெற்ற சந்தைப்படுத்தல் கண்காணிப்பு நிறுவனமான ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனம் (AMF) இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.  

CBL நிறுவனம் எனும் வகையில் இந்த சாதனையினூடாக பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது வரையறைகளுக்கு அப்பால் சென்று செயற்படும் நிறுவனங்களையும், மாறிவரும் சந்தை போக்குகளுக்கமைய தமது செயற்பாடுகளையும் மாற்றியமைக்கும் நிறுவனங்களையும் கெளரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்த ஒவ்வொரு நாடும் கடுமையான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், தெரிவு முறையினூடாக தேசிய வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் இடம்பெற்ற SLIM தேசிய விற்பனை காங்கிரஸ் விருதுகள் 2019 (NASCO) இல், பல விருதுகளை CBL தன்வசப்படுத்தியிருந்தது. இந்த ஆண்டு சந்தைப்படுத்தல் பிரிவில் ஏழு விருதுகளை நிறுவனம் சுவீகரித்திருந்தது. இதில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் ஆகியன அடங்கியுள்ளன.  

ஆசியாவின் ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் நிறுவனம் எனும் விருதை CBL மஞ்சி பெற்றுக் கொண்டுள்ள இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக அமைந்துள்ளதுடன், நிறுவனம் தொடர்ச்சியாக பின்பற்றி வரும் தர மேம்படுத்தல் நடவடிக்கைகளான ISO 22000:2005 உணவு பாதுகாப்பு முகாமைத்துவ சான்றிதழ், ISO 9001:2008 தர முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் ISO 14001:2004 சூழல் நிர்வாக கட்டமைப்பு சான்றிதழ் போன்றவற்றையும் பெற்றுள்ளது.    

Comments