உலக நல வாழ்த்து | தினகரன் வாரமஞ்சரி

உலக நல வாழ்த்து

உலகில் பலகோடி உயிரினங்கள் வாழ்கின்றன. மனிதனும் வாழ்கிறான். அனைத்து ஜீவன்களும் தங்கள் தேவைகளை நிறைவு செய்வதற்கு பூமியில் வளர்கின்ற தாவரங்கள்தான் உதவி செய்கின்றன. அவை செழிப்பாக வளர்வதற்கு மழை தேவை. எனவே உலகம் முழுதும் பரவலாக மழை பெய்யட்டும். மனிதருக்கு தேவையான உணவை உற்பத்தி செய்யும் உழவர்கள் மகிழ்ச்சியோடு அவற்றை உற்பத்தி செய்து நமக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் அவற்றை உண்ணும் நாம் நோயற்று ஆரோக்கியமாக வாழமுடியும். உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை அளிக்கப்பட வேண்டும்.  

அப்போதுததான் அவர்கள் மகிழ்வோடு உற்பத்தி செய்ய முடியும். நம் தேவைகளை நிறைவுசெய்ய தேவையான பல பொருட்கள் அளிக்கின்ற பாட்டாளிகள் உயர வேண்டும். உள்ளதை பகிர்ந்து உண்டு ஒற்றுமையாக வாழும் பண்பாடு சிறப்படைய வேண்டும்.  

அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு வருமானத்தை அளிக்கக்கூடிய வேலைவாய்ப்பு, பழிச்செயல் பதிவுகள் அளிக்கும் தீயகுணங்களை தவிர்த்து வாழும் விழிப்புணர்வு வேண்டும்.  

அனைவரிடமும் அன்பும் கருணையுமாக வாழக்கூடிய இயற்கைத்தன்மை அளிக்கும் இயற்கையுணர்வு மலரட்டும். ஆறறிவு பெற்ற மனிதர்கள் அனைவரும் ஒழுக்கம், கடமை, ஈகை என்கின்ற அறநெறி நின்று வாழ்வை செம்மைப்படுத்தி, தாமும் இன்பமாகவும், பிறரும் இன்பமாக வாழ ஒத்தும் உதவியும் செய்து சிறப்போடு வாழும் சிறப்பு பெறட்டும்..!  

சோ. வினோஜ்குமார்,  
தொழில்நுட்ப பீடம்,  
யாழ். பல்கலைக்கழகம்,  
கிளிநொச்சி.  

Comments