தோலின் மூலம் தொடு உணர்வையும், நாவின் மூலம் சுவை உணர்வையும், மூக்கின் மூலம் வாசனை உணர்வையும், கண்கள் மூலம் பார்வை உணர்வையும், காதுகள் மூலம் கேட்கும் உணர்வையும் உணர்ந்துகொள்வது ஐயுணர்வு என்று சொல்லப்படுகிறது.
இவையனைத்தையும் அறிந்துகொள்ளும் அறிவாகவும், நம்முள் அனைத்தையும் இயக்கும் ஆற்றலாகவும், உடல் உயிர் அனைத்துக்கும் மூலமாகவும், அரூபமாகவும் இருக்கின்ற பரம்பொருளை நமக்குள் தேடிக் கண்டுபிடிப்பது மெய்யுணர்வு ஆகும். இவ்வாறு நமக்குள் இருக்கும் பரம்பொருளே எல்லாப் பொருட்களுக்குள்ளும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்ந்து எந்த சூழ்நிலையிலும் எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காமலும், துன்பப்படும் உயிர்களுக்கு அத்துன்பத்தைப் போக்கும் வகையிலும் நமது செயல்களை ஒழுங்குபடுத்தி வாழ்வது ஒழுக்கமாகும்.
சோ. வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.