![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/28/q7.jpg?itok=LpEm9f-K)
இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வான் ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்ததால், அவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வானிடம் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை அவர் பயன்படுத்தியது தெரிய வந்தது.
2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான அவருக்கு ஓராண்டு தடைவிதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த தடை கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்தது