நம்பிக்கையான 'Stonic' அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கையான 'Stonic' அறிமுகம்

இலங்கையின் மோட்டார் வாகனச் சந்தையில் காணப்படும் ஆர்வத்தை மீளவும் தூண்டுவதற்கு உறுதியெடுத்துள்ள Kia நிறுவனம், ஒரு மாதகாலத்துக்குள் தனது இரண்டாவது புத்தம்புதிய வாகன வகையைக் கொழும்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Kia நிறுவனத்தால் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கார்களில் அழகான கார்களில் ஒன்றாகவும், விரிவடைந்துவரும் சிறுவகை SUV பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்னை கவரக்கூடிய புதிய கார்களில் ஒன்றாகவும் கருதப்படும் Kia Stonic, Kia வின் ஐரோப்பிய, கொரிய வடிவமைப்பு ஸ்டூடியோக்களுக்கு இடையிலான நெருக்கமான இணைப்பின் விளைவாக உருவானதோடு, கொரியாவிலுள்ள Kia வின் சொஹாரி உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. 

SUV வடிவமைப்பால் உந்தப்பட்ட ஸ்டோனிக்கானது, Kia நிறுவனத்தின் மிகவும் மேம்பாடான இலகு எடை கொண்ட மூன்று சிலிண்டா் 1லீற்றர் டோபோ சார் ஜிங் கொண்ட நேரடி பெற்றோல் செலுத்துகை (turbo charged gasoline direct injection) இயந்திரத்தைக் கொண்டதோடு, 120தடுப்பு குதிரை வலுவையும் (BHP), ஏழு வேகத்தையும் (7 Speed) இரண்டு கிளட்ச் பரிமாற்றத்தையும் கொண்டதாகும். இதன் காரணமாக இயந்திர செயற்றிறனும் பெறுபேறும் அதிகரிப்பதோடு, உடனடியான வேக அதிகரிப்பை வழங்குகிறது.

இவ்வாகனத்தின் அறிமுகம் தொடா்பில் கருத்துத் தெரிவித்த Kia Motors (லங்கா) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அன்ட்ரூ பெரேரா, “எமது காா்களில் இலங்கையில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்பை, Stonic கொண்டுள்ளது.

கண்ணைக் கவர்கின்றதும் நம்பிக்கையை அளிப்பதுமான சிறுவகை SUV ஒன்றாக, உண்மையான ஐரோப்பிய வடிவமைப்பின் கவா்ச்சியையும் கொண்டுள்ளது. உள்ளேயும் வெளியேயுமென அதிகளவு விருப்பமைவு பெற்ற காராகவும் Stonic உள்ளதோடு, இந்த வா்க்க காா்களில் அதிக ஸ்மாா்ட் (Smart) கார்களில் ஒன்றாகவும் இது உள்ளது. பாதுகாப்பு, செளகரியம், இலகுதன்மை ஆகியவற்றுக்காக பல்வேறான தொழில்நுட்ப வடிவமைப்புகளை இது கொண்டுள்ளது” என்று தெரிவித்தார். 

Comments