![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/01/12/Capture--1.jpg?itok=lILs4Vro)
இலங்கையில ஊழல் மோசடியில் பேர்போன இடமாகக் கருதப்படுறது, சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் இடமெண்டதுதான் எல்லோரதும் அபிப்பிராயம். அதாவது ஆர்எம்வி என்று இங்கிலீசுல சொல்லப்படுகிற மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் எண்டு வைச்சுக்ெகாள்ளுங்களன்!
அந்தத் திணைக்களத்திலை சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கிறத விட வாகனம் ஓட்டுறது லேசு! அந்தளவிற்குக் கெடுபிடி! நுகேகொடையிலயும் வேரஹெரவிலயும்தான் மெடிக்கல் போடுற இடம் இருக்குது. முந்தியெல்லாம், லைசன்ஸ் எடுக்கிறத்துக்கு, விண்ணப்பம் செய்யிற ஆக்கள் தங்களுடைய டொக்டரிட்டயே, மெடிக்கல் கொண்டு வரலாம். இப்ப அப்பிடிச் செய்யேலாது. பொதுசனம் பொய் செய்யுமெண்டு இரண்டு இடத்திலை கட்டிப் பிடிச்சுக்ெகாண்டிருக்கும் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் நிறுவனம், அப்படிச் சொல்லிச் ெசால்லியே பொது மக்களைச் சுரண்டிக்ெகாண்டிருக்கிறது. இதை நான் நேரிலயே கண்டிருக்கிறன் என்கிறார் நண்பர். இதற்கு முன்பும் அதுபற்றி இந்தப் பத்தியிலை எழுதியிருந்தம்.
மெடிக்கல் போடுறதுக்கு முதலில் விடியப்புறம் போய் வரிசையில் நிற்க வேணும். எங்கடை முறை வந்ததும்தான் விண்ணப்பப் படிவம் தருவாங்கள். பிறகு அதை நிரப்பிக்ெகாண்டு மற்றொரு வரிசையிலை நிற்க வேண்டும்! எங்கடை முறை வந்ததும் உள்ளே போகவேண்டும். முதல் வேலை நிறை பார்ப்பது, அது முடிய காசு கட்டுறத்துக்குப் பதிவு செய்ய வரிசை, பிறகு பணம் கட்டுறதுக்கு வரிசை.. அது முடிய அப்பிடியே இரத்தம் சோதிக்க போக வேணும். அங்கதான் இலங்கையிலையே பெரிய டாக்குத்தர்மார் இருக்கிறார்கள். (என்று அவர்களுக்கு நினைப்பு) அதை முடிச்சுக்ெகாண்டு கை, கால்ல பலம் இருக்கிறதா என்று எல்லாத்தையும் அசைச்சுக்காட்ட வேண்டும்; பிரஷர் பார்க்க வேண்டும். அதன் பிறகு கண்ணைச் செக் பண்ண வேண்டும். கண் பார்வை ஒழுங்கா இல்லையெண்டால், மோட்டார் சைக்கிள்கூட ஓட்ட முடியாது.(என்று அவர்கள் நினைக்கிறார்கள்) இந்த எல்லா டெஸ்ட்டலயும் வெற்றி பெற்றால், உங்களை வெளியே போய் நிற்குமாறு சொல்லுவார்கள். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் மருத்துவச் சான்றிதழ் கிடைக்கும். அதற்கு எப்படியும் பின்னேரமாகிவிடும். பிறகு அந்த மெடிக்கல் சர்டிபிகட்டைக் கொண்டுபோய் லேர்னர்ஸ்காரங்களிடம் கொடுக்க வேண்டும். எவனாவது லேர்னர்ஸ் இல்லாமல் தனியே போனான் என்றால், செத்தான்! அதைப் பற்றிச் சொல்வதற்கு இந்தப் பத்தியில் முடியாது. இதற்கு முன்பும் எழுதப்பட்டிருந்தது. அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை எல்லாவிடமும் ஊழல், இலஞ்சம். பாதுகாப்பு உத்தியோகத்தர், அங்குள்ள உத்தியோகத்தரின் சிபாரிசில் சென்றால், ராஜமரியாதை! அந்த மரியாதையுடன் நீங்கள் உங்கள் பணியை ஆற்றிக்ெகாண்டிருக்கும்போது அங்கே பலர் வரிசையில் காத்திருப்பார்கள். அத்தனைபேரையும் காத்திருக்க வைத்துவிட்டுத்தான், சிபாரிசின்பேரில் செல்வோருக்கு வேலை நடக்கும்!
அண்மையிலை இந்த டிபாட்மெண்டக்கு ஜனாதிபதி போனதிலை நண்பருக்குப் பெரும் கொண்டாட்டம். பாதிக்கப்பட்டவராச்சே!
துரிதமாக லைசன்ஸ் வழங்குறதுக்கு ஜனாதிபதி நடவடிக்ைக எடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லை, கனரக வாகனத்திற்கு மட்டுமே இனி முழுமையான மருத்துவப் பரிசோதனை. மேலும் மூன்று துணை மருத்துவப் பரிசோதனை நிலையங்களை ஸ்தாபிக்கவும் நடவடிக்ைக எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லை, இரண்டு மணித்தியாலத்தில் லைசன்ஸ் இனிக் கையில் கிடைக்கும்! இதுதான் எதிர்பார்க்கப்பட்டது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இன்னொன்றையும் செய்யப்போறதாச் சொல்லியிருக்கிறார். அதாவது, இனிமேல் லைசன்ஸ் அச்சடிக்கும் பொறுப்பை அரசாங்கமே எடுக்கப்போகுதாம். ஒப்பந்தம் முடிஞ்சு நாலு வருசமாகியும், இன்னும் ஒரு தனியார் நிறுவனம்தான் அச்சடிக்குதாம். அது இன்னும் ஓரிரண்டு மாதங்கள்ல அரசாங்கம் பொறுப்பிலை வந்திடும் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். நல்ல விசயம்! என்று நண்பர் மட்டுமில்லை, நாட்டில் அனைத்துத் தரப்பினரும் கைகொட்டி மகிழ்கிறார்கள்!
அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்துதான் இந்த நாட்டைக் குட்டிச் சுவராக்கிப்போட்டார்கள். இப்போது நல்லதொரு நிர்வாகி வந்திருக்கிறார். அதிகாரிகளின் துரைத்தனத்தைத் துடைத்தெறிய நடவடிக்ைக எடுத்து வருகிறார். ஒன்லைன் மூலம் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்ெகாடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்.
ஒன்லைன் என்றதும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க என்ற நடிகர்தான் நினைவுக்கு வருகிறார். தொலைபேசியில் பேசி, அதைப் பதவுபண்ணிவைப்பது அவரின் பொழுதுபோக்காம். கனபேர் முத்திரை சேகரிக்கவில்லையா? அப்படி! முத்திரை சேர்த்து வைப்பதால், ஓரளவாவது அறிவாவது வளரும்! தொலைபேசி பதிவை சேர்த்து வைத்தால் என்ன நடக்கும்? முதலில் போனில் நினைவகம் போகும். பிறகு மரியாதை போகும்! கடைசியில் எல்லாம் போச்சு!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திலை வேலை பார்க்கிற கனபேருக்கு இப்ப பிரச்சினையாம். எல்லாருடைய வங்கிக் கணக்ைகயும் அரசாங்கம் சோதனை செய்யப்போகுதாம்! என்னெண்டாலும், எங்கெண்டாலும் நேர்மையும் வாய்மையும் தவறி நடந்தமெண்டால், கடைசியிலை நிலைமை இப்பிடித்தான் போகும்!
இப்பிடி ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தியமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில்தான் என்றும் அமைதியிருக்கும்!