மொபிடெல் காஷ் பொனான்ஸா 5ஆம் பருவத்தில் பெருமளவு வெகுமதிகள் | தினகரன் வாரமஞ்சரி

மொபிடெல் காஷ் பொனான்ஸா 5ஆம் பருவத்தில் பெருமளவு வெகுமதிகள்

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பணப் பரிசுகளை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டமான மொபிடெல் காஷ் பொனான்ஸா, தொடர்ச்சியான 5ஆவது பருவ காலமாகவும் 2020ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுகளில், மேர்சடீஸ் பென்ஸ் கார்கள் மற்றும் மில்லியன் கணக்கான பணப்பரிசுகள் போன்றன வாடிக்கையாளர்கள் மத்தியில் பகிரப்பட்டிருந்தமையால் பெருமளவு வரவேற்பையும், புகழையும் பெற்றிருந்தது. 2019ஆம் ஆண்டில் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு காஷ் பொனான்ஸா ஊடாக பரிசுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், புத்தாண்டிலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது. ஸ்தாபிக்கப்பட்டது முதல், மொபிடெல் காஷ் பொனான்ஸா ஊடாக 32சொகுசு வாகனங்கள் 2.3மில்லியன் ரூபாய் பெறுமதியான பணப் பரிசுகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதையும் சேர்ந்த பல இலங்கையர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் களிப்பூட்டும் ஊக்குவிப்புத் திட்டமாக இது அமைந்துள்ளது.  

இந்த ஆண்டிலும், மொபிடெல் காஷ் பொனான்ஸா ஊடாக வாழ்க்கையை மாற்றியமைத்தல் எனும் தொனிப்பொருளில் பல பரிசுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. வாழ்க்கையை மாற்றியமைக்கும் அன்பளிப்புகளை வழங்குகின்றமைக்கு மேலதிகமாக, களிப்பூட்டல், உதவிகள், செளகரியம் மற்றும் ஒன்றுகூடல் போன்றவற்றுக்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். முழுக் குடும்பத்தாருக்கும் மனம் மறவாத மகிழ்ச்சியூட்டும் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாக காஷ் பொனான்ஸா அமைந்துள்ளதுடன், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.  

Comments