படைவீரர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகையை வழங்கியுள்ள DFCC வங்கி | தினகரன் வாரமஞ்சரி

படைவீரர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகையை வழங்கியுள்ள DFCC வங்கி

இலங்கையில் முழுமையான வர்த்தக சேவைகளை வழங்கும் வங்கிகளுள் ஒன்றான DFCC வங்கி, அண்மையில் இடம்பெற்ற ‘நிதிமானியம் வழங்கல் வைபவத்தில்’ படைவீரர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைளை வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியுடன் கைகோர்த்துள்ளது. 

இந்நிகழ்வு நெலும் பொக்குண மகிந்த ராஜபக்ச அரங்கத்தில் நடைபெற்றது. பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல் எச் ஷவேந்திரசில்வா, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன, DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி லக்ஷ்மன் சில்வா, இலங்கை இராணுவம் மற்றும் DFCC வங்கியின் ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.  

மாணவர்கள் வளரும் போது அவர்களுக்கு வியத்தகு வெகுமதிகளை அளிக்கும் “DFCC Junior”கணக்குகள் மற்றும் பல்வேறுபட்ட பரிசுகளும் 250மாணவர்களுக்கு DFCC வங்கியால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மாணவர்கள் 250 பேருக்கு பெறுமதிமிக்க பாடசாலை காகிதாதிகள் அடங்கிய பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.    

Comments