கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த Coca - Cola | தினகரன் வாரமஞ்சரி

கிராம மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த Coca - Cola

இலங்கையில் பண்டைய பொறியியலின் அற்புதத்தை மீட்டமைத்த Coca-Cola Beverages Sri Lanka Ltd. (CCBSL) Coca-Cola அறக்கட்டளையின் நிதியுதவியுடன் மற்றும் நீர் வழங்கிடும் பணிக்கான உறுதிப்பாட்டின் கீழ் அனுராதபுரம் தம்மன்னாவ கிராமத்திலுள்ள கைவிடப்பட்ட இரண்டு முக்கிய நீர் தேக்கங்களை மறுசீரமைப்பு செய்தது.

பாரம்பரிய பண்டைய இலங்கை மன்னர்கள் மக்களின் செழிப்புமிகு வாழ்க்கைக்காக நீர்த்தேக்கங்களைக் கட்டினர்.

Coca-Cola வின்  இந்த முக்கிய முயற்சி நீரை ஆதாரமாகக் கொண்டு வாழும் சமூகத்தினருக்கு பயனளிப்பது மட்டுமல்லாது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்திடும். கைவிடப்பட்ட நீர்த்தேக்கங்களை  புதுப்பிப்பதன் மூலம் இந்த நீர் வளத்திற்கான எளிமையான அணுகலானது இந்த பின்தங்கிய சமூகங்களுக்கான வாய்ப்புக்களை திறக்கிறது.

நீர்ப்பாசனம் மற்றும் தரமான நீர் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதோடு இந்த குறிப்பிடத்தக்க திட்டத்தின் நோக்கம் தம்மன்னாவ கிராமத்துப் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வலுவூட்டலை உள்ளடக்கியுள்ளது.  

இந்த திட்டத்திற்காக Coca-Cola ஆனது (1970கள் முதல் இலங்கையில் இயங்கும் ஸ்வீடன் நாட்டு சர்வதேச அபிவிருத்தி நிறுவனம்) உடனும் மற்றும் செயற்படுத்தல் கூட்டாளராக அனுராதபுர மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டதும் சமூக அணிதிரட்டல், சிவில் சமூக அமைப்புக்களை உருவாக்குதல், பொது ஆதரவு சேவைகளை இணைத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் குறைப்பதில் பணியாற்றுதல் ஆகியவற்றில் அனுபவம் கொண்ட அமைப்பான Rajarata Praja Kendraya (RPK) உடனும் இணைந்து செயற்படுகிறது. 

இத்திட்டத்தினை ஆரம்பிக்க முன் நீா்த்தேக்கங்களானவை நீர்க்கசிவு, பாசிகளின் தொற்று மற்றும் சதுப்பு நிலமாகவும் காணப்பட்டன. கடந்த காலங்களில் இந்நீர்த்தேக்கம் பாதுகாப்பான நீருக்கான அணுகலை வழங்கிடவும் முக்கியமான வருமான ஆதாரமான கிராமத்தை சுற்றியுள்ள நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனத்தினை வழங்கிடவும் பயன்படுத்தப்பட்டது.

இது அங்கு வாழும் குடும்பங்களுக்கு ஆண்டு தோறும் இரண்டு அறுவடை பருவங்களையும் இரண்டு செட் வருமானங்களையும் வழங்கியது.

Comments