![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/22/q9.jpg?itok=CBG9SEKv)
விசாவுக்கு விண்ணப்பிக்க மெட்ரோ நகரங்களுக்கு செல்லவோ அல்லது ஒரு நாள் லீவு எடுக்க வேண்டிய தேவை இனியில்லை. இலங்கையிலிருந்தான வெளிவாரி பயணத்தின் மிக உறுதியான வளர்ச்சியை விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் காணப்படும் அதிகரிப்பு பிரதிபலிக்கிறது. குறைந்த விமானப் பயணக் கட்டணங்கள், மூன்றாம் தரப்பு பயணத்திரட்டிகள், சிறந்த இணைப்பு மற்றும் வசதியான விசா விண்ணப்பங்கள் என்பன இந்நிலைமைக்கு மிக முக்கியமான காரணங்கள் ஆகும். வளர்ந்து வரும் பயணச் சமூகத்துக்கு ஏற்ப வேகமாய் இருக்கவும் பயணம் செய்திடும் பயண பருவக்காலததின் உச்சத்தை வென்றிடவும் VFS Global ஆனது பல முன்னெடுப்புக்களை அபிவிருத்தி செய்தும் அவற்றை நடைமுறைப்படுத்தியும் உள்ளது.
VFS Global இன் மேலதிகச் சேவைகள் தற்போதைய காலத்தில் பயணம் செய்வோரின் மாறுபடும் தேவைகளுக்கிணங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு விசாவுக்காக விண்ணப்பிக்கும் செயன்முறையானது மேலும் இலகுபடுத்தப்பட்ட, தனித்துவமான, தனிப்பயனாக்கப்பட்ட, நேரத்தை சேமித்திடும் மற்றும் சிக்கலற்றதாக காணப்படுகிறது. தற்போதைய ஒட்டுமொத்த பயன்பாட்டு செயன்முறையை மாற்றியமைத்த பின்னர் இந்த மேலதிக சேவைகள் உச்சத்தை அடைய மிகவும் பயனுள்ளதாய் அமையும்.
பயணிகள் தங்கள் விசா விண்ணப்பத்திற்காக படிவத்தை பூர்த்தி செய்யும் போது பெரும்பாலான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இருப்பினும் இந்த Premium Lounge மூலம் ஒரு பயிற்சி பெற்ற ஊழியர் விசா விண்ணப்ப செயல்முறையின் போது அவரை முழுவதுமாக கையாளுகின்றார். இவ்வாறு அவர்களை செளகரியமாக உணரச் செய்கின்றனர். தனிப்பயனாக்கப்பட்ட கவனமும் படிப்படியான உதவியும் முதல் முறையாக பயணிப்போருக்கும் மற்றும் மூத்த பிரஜைகளுக்கும் இந்த Premium Lounge பொருத்தமானதாக அமைகிறது.
Doorstep எளைய என்பது விசா தொழிற்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சேவையாகும். தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த சேவையானது விசா விண்ணப்ப செயன்முறையை இலங்கையின் தொலைதூர இடங்களுக்கும் பின் தங்கிய கிராமங்களுக்கும் கொண்டு வருகிறது. இது அவர்களுக்கு விசா விண்ணப்ப செயன்முறைய எளிதாக செய்திடும் வசதியை வழங்குகிறது.