காப்புறுதித் தளமேடை வழங்கும் பெறுமதி சேர் சேவைகள் | தினகரன் வாரமஞ்சரி

காப்புறுதித் தளமேடை வழங்கும் பெறுமதி சேர் சேவைகள்

SANASA General Insurance Company Ltd மற்றும் Deutsche Gesellschaft for Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆகியன ஒன்றிணைந்து உள்நாட்டில் விவசாய சமூகத்திற்கு உதவும் வகையில் இலகுவான மற்றும் பாதுகாப்பான இணைய காப்பறுதித் தளமேடையான இனை அண்மையில் ஆரம்பித்துள்ளன.

வானிலைச் சுட்டெண் அடிப்படையிலான திட்டங்கள் மற்றும் இழப்பீட்டுத் திட்டங்கள் என இரு பிரதான பிரிவுகளின் கீழ் பல்வேறுபட்ட காப்புறுதித் திட்டங்களை உள்நாட்டு விவசாயிகள் அடைந்துகொள்ளும் தளமேடையை SANASA General Insurance  இதன் மூலமாக அவர்களுக்கு வழங்குகின்றது.

காப்புறுதித் திட்டத்தை கொள்வனவு செய்தல் மற்றும் இழப்பீட்டுக் கோரல்களை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை இலகுபடுத்துகின்றமைக்குப் புறம்பாக, இணைய மற்றும் மொபைல் அடிப்படையிலான iFarm தளமேடையில் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ள ஏராளமான பெறுமதி சேர் சேவைகளையும் பாவனையாளர்கள் இலவசமாகப் பெற்றுப் பயனடைய முடியும்.  

மிகச் சிறந்த விவசாய நடைமுறைகள், பிராந்திய விவசாயம் தொடர்பான உள்ளார்ந்த அறிவு மற்றும் பயனுள்ள உதிரித் தகவல்கள், பயிர்களைப் பேணிப் பராமரித்தல், தாவர நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான தகவல் ஆகியவற்றை இது கொண்டுள்ளதுடன், விவசாயம் தொடர்பான ஏனைய பல்வேறு தலைப்புக்களையும் கொண்டுள்ளது.  

இந்த செயலியின் (app) பாவனையாளர்கள் ஒழுங்கான அடிப்படையில், உடனுக்குடன் வானிலை எதிர்வுகூறல் அறிக்கைகளை அறிந்து கொள்ள முடிவதுடன், அதன் மூலமாக தீர்மானங்களை மேற்கொண்டு, கடுமையான வானிலை மாற்றங்களை முற்கூட்டியே எதிர்பார்த்து, இழப்புக்களை குறைக்கும் வழிமுறைகளை முன்னெடுக்க முடியும்.  

நாடெங்கிலுமுள்ள வேறுபட்ட மொத்த விற்பனைச் சந்தைகளில் அனைத்து விவசாய உற்பத்திகளின் விலைகளும் பட்டியலிடப்படும். இது விவசாயிகள் சந்தை விலைகளை இலகுவான மற்றும் செளகரியமான வழியில் அறிந்து கொள்ள இத்தகவல் உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

இந்த செயலியை (app) உபயோகிக்கும் விவசாயிகள் iFarm தளமேடையினூடாக கொள்வனவாளர்களுடன் நேரடியாக இணைப்பினை ஏற்படுத்த முடியும். விசேடமாக, குறிப்பிட்ட விளைச்சலில் அளவுக்கதிகமான கையிருப்பைக் கொண்டுள்ள காலகட்டங்களில் விவசாயிகளுக்கு இது உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

Comments