சவுத் ஏசியன் டெக்னோலஜீஸின் ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ | தினகரன் வாரமஞ்சரி

சவுத் ஏசியன் டெக்னோலஜீஸின் ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’

இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விநியோகஸ்தராகவும், இலங்கையில் Kaspersky உற்பத்திகளின் ஏக விநியோகஸ்தராகவும் திகழ்கின்ற சவுத் ஏசியன் டெக்னோலஜீஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமானது, ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ (Kaspersky Mega Surprise) என்ற புதுமையான விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தை Kaspersky வாடிக்கையாளர்களுக்காக அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.  

Kaspersky இன் உற்பத்தி தொடர்களான Kaspersky Internet Security, Kaspersky Total Security, Kaspersky Internet Security for Android மற்றும் Kaspersky Safe Kids ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்தில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டம் 2020ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.  

இதன்படி, Kaspersky வாடிக்கையாளர்களுக்கு ‘Kaspersky மாபெரும் ஆச்சரியம்’ என்ற விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தின் ஊடாக தொலைக்காட்சிப் பெட்டிகள், கார்கில்ஸ் புட் சிட்டி வவுச்சர்கள், கையடக்கத் தொலைபேசிகள், வெகியூம் கிளீனர்கள், மைக்ரோவேவ் அவன் அடுப்புக்கள், ரைஸ் குக்கர்கள் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட வீட்டுப் பாவனைப் பொருட்களை பரிசுகளாக வென்றெடுப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளனர்.  

இந்த விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் அதிர்ஷ்டச் சீட்டிழுப்பு மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அத்துடன், ஏப்ரல் மாதத்தில் மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான மாபெரும் இறுதிப் பரிசை வென்றெடுப்பதற்கான தகுதியை அனைத்து விண்ணப்ப நுழைவுகளும் பெற்றிருக்கும்.  

சவுத் ஏசியன் டெக்னோலஜீஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் பெரோஸ் கமர்டீன் கூறுகையில், “எமது வாடிக்கையாளர்ளுக்கு வெகுமதியளிக்கும் முன்முயற்சியின் ஒரு அங்கமாக இப் பரிசுகளை அவர்களுக்கு வழங்குவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்” என்று குறிப்பிட்டார்.    

Comments