![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/07/q10.jpg?itok=F47IsoQq)
பெஷன் பக் நிறுவனம், பாடசாலைகளை மையமாகக் கொண்ட தனது முதலாவது பசுமைத் தோட்டம் வேலைத் திட்டத்தை (Green Garden) ஆரம்பித்து வைக்கிறது. இதன் மூலம் இளம் சந்ததியினருக்கு நிலையான சுற்றுச் சூழலைப் பேணுவதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இதன் முதல் கட்ட வேலைத் திட்டம் பெப்பிலியான சுனேத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னணி நாகரீக ஆடை உற்பத்தி, விற்பனை நிறுவனமான பெஷன் பக், இதற்கென 350வகையான மரக்கறி, மருத்துவத் தாவரங்கள், அழகிய மற்றும் மலர்க் கன்றுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இதற்கு மேலதிகமாக பெஷன் பக் தேவையான உரத் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளது. இதேவேளை, இதற்கென அழகிய நடை பாதைகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
சுனேத்ரா தேவி பாலிகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த பசுமைத் தோட்ட வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சூழல் பற்றிய அறிவை மாணவர்களிடையே அதிகரித்து, விவசாயம் சார்ந்த பாடங்களில் அவர்களின் நடைமுறை அறிவை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் NCFSLM-BPP-1(2) வேலைத் திட்டதுடன் இணைந்த ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. பெஷன் பக் (பிறைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகமைத்துவத்தின் சிறந்த மேற்பார்வையின் கீழ் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில் கருத்துத் தெரிவித்த பெஷன் பக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சபீர் சுபைன் ‘சூழலின் நிலையான தன்மை மற்றும் இளம் சந்ததியினரின் திறமைகளை அபிவிருத்தி செய்தல் ஆகிய இரண்டும் பெஷன் பக் நிறுவனத்தின் இரண்டு முக்கிய இலக்குகளாகும்’ என்று கூறினார்.