கொழும்பு 2இல் பேரவாவியின் முகப்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர் மட்ட முதலீட்டு அமைவிடத்தில் Sanken Group இனால் நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற அதன் பிரதான குடியிருப்பு செயற்திட்டமான Capitol TwinPeaks பேண்தகைமை கொண்ட பசுமைக் கருப்பொருள் கொண்ட கட்டடத்தினூடாக, காபன் வெளியீட்டு விளைவை 18%இனால் குறைவடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Kumanayake, Luo, 2018ஆய்வுக் கட்டுரை மூலமாக இந்தபுள்ளி விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் Green Building Council of Sri Lanka இடமிருந்து பசுமை சான்று அங்கீகாரத்திற்கு (Green Certification) இச்செயற்திட்டம் தற்போது விண்ணப்பித்துள்ளது.
50அடுக்குகளுடன் வானளாவிய உயரத்தில் ஒன்றுடன் ஒன்றுபிணைந்துள்ள இரட்டைக் கோபுர வடிவிலான இச்செயற்திட்டமானது, தெற்காசியாவிலேயே அதியுயர் வான் பாலத்தைக் கொண்டுள்ளதுடன், பல்வேறுபட்ட வடிவங்களில் 438அடுக்குமனைகளையும் உள்ளடக்கியுள்ளது. Sanken Construction Pvt Ltd நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் பேண்தகைமை தொடர்பான கண்டிப்பான நிர்மாண வழிகாட்டல் விதிமுறைகளைப் பின்பற்றி இது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
Sanken Construction Pvt Ltd நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் முகாமையாளரான நிலங்கலக்மால் கருத்து வெளியிடுகையில், பசுமைக் கருப்பொருளைப் பேணும் கட்டடம் ஒன்றின் பெறுமானம் 3-5%ஆல் அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய சந்தைச் சூழலில் இது பெருமளவில் பங்களிக்கின்றது. இலங்கையின் நிர்மாணத் தொழிற்துறை முன்னோடிகளுள் ஒன்று என்றவகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த நிர்மாணத் தீர்வுகளை வழங்க வேண்டியது எமது கடப்பாடாகும். ஆரோக்கியம் மற்றும் நலன் போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான எமது வாடிக்கையாளர்கள் பேண்தகைமை தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ளதுடன், பயன்பாடுகளைச் சேமித்து, காபன் வெளியீட்டு விளைவைக் குறைத்து பேண்தகைமையை முன்னெடுப்பதில் அவர்களது பங்கு அளப்பரியது. மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் உதவுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளன,
Sanken Construction Pvt Ltd, Capitol TwinPeaks செயற்திட்டத்தின் பணிப்பாளரான டீ.எல். அமரசிங்க இவ்விடயம் தொடர்பில் கருத்துவெளியிடுகையில், பேண்தகைமை தொடர்பில் ISO தர நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளமை கழிவுகளை 4-5மூ இனால் குறைப்பதற்கு வழிகோலியுள்ளது.
ISOதர நடை முறைகளைப் பின்பற்றுவதால், செயற்திட்டத்தின் முழுமையான செயற்பாடுகளில் உயர் தரம், செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை அவை உறுதிப்படுத்துகின்றன, என்று குறிப்பிட்டார்.
Capitol TwinPeaks செயற்திட்டத்தை வழிநடாத்தும் அணி தற்போது ISO 9001:2015, ISO 14001:2015 மற்றும் OHSAS 18001:2007 தரசான்று அங்கீகாரங்களைப் பெற்றுள்ளதுடன், The Green Building Council, Sri Lanka இடமிருந்து Green Certification சான்று அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் இச்செயற்திட்டம் விண்ணப்பித்துள்ளது.