![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/14/q7.jpg?itok=lM8qGmrR)
உலகளாவிய ரீதியில் காணப்படும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்கள் தமது அன்புக்குரியவர்களுடன் உயர்தரம் வாய்ந்த ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், தகவல்கள் பரிமாற்றம் (messaging) மற்றும் பல அம்சங்களுடன் நாளாந்தம் தொடர்பாடல்களை பேணுவதற்காக பாதுகாப்பான மற்றும் இலவச இணைப்புகளை வழங்கி வருவதாக Rakuten Viber இன் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் அனுபவ் நாயர் குறிப்பிட்டார்.
இலங்கையருக்கு இலகுவாகவும் செளகரியமாகவும் தொடர்பாடல்களை பேணுவதற்காக, Viber அண்மையில் தனது UI ஐ சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிமுகம் செய்திருந்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு UI கட்டமைப்பு அறிமுகத்துக்கு ஆரம்பத்தில் பெருமளவு வரவேற்பு காணப்பட்டதுடன், சுமார் 45.5வீத பாவனையாளர்கள் இவற்றை பின்பற்ற ஆரம்பித்தனர். எதிர்வரும் மாதங்களில் இந்த சேவைகளை மேலும் உள்நாட்டவர்கள் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்காக அதிகளவு வாய்ப்பை கொண்ட சந்தையாக இலங்கை அமைந்துள்ளது. இலங்கையர் தமது சொந்த மொழியில் தொடர்பாடல்களை பேண ஆர்வம் கொண்டுள்ளனர். மொத்த சனத்தொகையில் 85வீதத்துக்கு அதிகமானோர் தமது சொந்த மொழியை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். Viberஇல் பெருமளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர் பெக்களில் உள்நாட்டு பிரபலங்கள் மற்றும் உரையாடல்கள் அடங்கியுள்ளன.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 70 வீதத்துக்கும் அதிகமான ஸ்மார்ட்ஃபோன் பாவனை காணப்படும் நிலையில், Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்பை இந்த பிராந்தியம் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்ற பிரிவில் கட்டமைப்பாளர் எனும் வகையில், எமது சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பில் நாம் முழுமையான புரிந்துணர்வை கொண்டுள்ளோம். எனவே, எமது துறையில் பெருமளவு சவால்கள் காணப்பட்ட போதிலும், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களை நாம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார் அனுபவ் நாயர்.