![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/08/24/a26.jpg?itok=0KCnENgM)
சுயாதீனமானப் பொதுப் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய ஆயுள் காப்புறுதிக் குழுமமான AIA குழும லிமிடட் (“AIA” அல்லது “நிறுவனம்” பங்குக் குறியீடு:1299) தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் மிகவும் அதிக எண்ணிக்கையான மில்லியன் டொலர் வட்ட மேசை (MDRT) உறுப்பினர்களைக் கொண்டுள்ள உலகின் ஒரேயொரு பல்தேசிய நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை அறிவித்திருக்கின்றது.
2020ஜுலை 01ஆம் திகதியின்படி MDRT உறுப்பினர்களாக மொத்தமாக 12,796 AIA முகவர்களும் மற்றும் முகவர் நிறுவனத் தலைவர்களும் பதிவு செய்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
MDRT ஆயுள் காப்புறுதி மற்றும் நிதிச் சேவைகள் வியாபாரத்தில் அதிசிறந்த தரத்திற்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உலகளாவிய மற்றும் சுயாதீனமான ஒரு அமைப்பாகும். இதனுடைய உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் மட்டக் கட்டுப்பணம், தரகுப் பணம் மற்றும் வருவாயை ஏற்படுத்துமாறும், அத்துடன் அதிசிறப்பான தொழில் ரீதியான அறிவு, கண்டிப்பான நெறிமுறைசார் நடத்தை மற்றும் மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவையை நிரூபிக்குமாறும் வேண்டப்படுகின்றனர்.
AIA குழுமத்தின் தலைவரும் மற்றும் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான லீ யுஆன் சியோங் கருத்துத் தெரிவிக்கையில், “எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பிக்கையான பங்காளர்களாக தினமும் மிகச்சிறந்த பணியினை வழங்கும் எங்களின் முகவர்கள் குறித்து நான் மிகவும் பெருமையடைகின்றேன்.
MDRT தகுதியாளர்களுக்காக உலகில் AIA இனுடைய முதற்தர நிலையானது எங்களுடைய நிறுவனத்திற்கான மிகவும் முக்கியமான போட்டித்தன்மையான அனுகூலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களுடைய முகவர் நிறுவன ஊழியர்களின் உயர் தரத்தையும் மற்றும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது. மிகவும் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான மற்றும் சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு எங்களுடைய மில்லியன் எண்ணிக்கையான வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக எங்களின் முகவர்கள் முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதனை நாங்கள் தொடர்ச்சியாக உறுதிப்படுத்துவோம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
AIA குழுமத்தின் பிரதான விநியோக மற்றும் பிராந்தியப் பிரதான நிறைவேற்று அதிகாரி பில் லிஸ்லி கருத்துத் தெரிவிக்கையில், “உலகில் கோவிட்-19பெருந்தொற்றின் தாக்கம் காணப்பட்டிருந்த போதிலும், குறிப்பாக 2020இல் இந்த வியப்பூட்டும் முடிவுகளை எய்திருக்கின்ற AIA இன் அதிசிறந்த முகவர்கள் குறித்து நான் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் உலகின் முதற்தரமான MDRT நிறுவனமாகத் திகழ்வதென்பது எங்களுடைய முகவர் நிறுவன ஊழியர் அணியில் AIA இனுடைய நீண்டகால உறுதியான முதலீட்டையே பிரதிபலிக்கின்றது. மேலும் காப்புறுதித் துறையில் மிகச்சிறந்த தொழில்நுட்ப, பயிற்சி மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகளை எங்களுடைய முகவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் தொடர்ச்சியாக மிகவும் ஆழமான மற்றும் உறுதியான அர்ப்பணிப்பினையே பேணுகின்றோம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.