இலங்கை திரவ பெற்றோலிய எரிவாயு சந்தையில் முன்னணியில் திகழும் நிறுவனமான Litro Gas Lanka Limited, பிரபல போக்குவரத்து சேவை வழங்கும் தளமான PickMeஉடன் கைகோர்த்துள்ளதுடன், PickMeஅப்ளிகேஷன் ஊடாக கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் அல்லது மீள்நிரப்பலுக்கும் ரூபா 250தள்ளுபடியை வழங்கவுள்ளது.ஓகஸ்ட் 8முதல் செப்டம்பர் 21வரையான குறிப்பிட்ட காலம் வரையிலேயே இந்த சலுகை கிடைக்கவுள்ளது.
மேலும் இந்த சலுகையானது இலங்கையில் வழங்கப்பட்டுள்ள அனைத்து விசா அட்டைகளுக்கும்(வரவட்டை, கடனட்டை மற்றும் முற்கொடுப்பனவு அட்டை) கிடைக்குமென்பதுடன், கொள்வனவின் போது தானாக இந்த தள்ளுபடித் தொகை கழிக்கப்படும். இதற்காக எவ்வித ஊக்குவிப்பு குறியீட்டையும் பாவிக்க வேண்டிய தேவையில்லை.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, Litro Gas Lanka Limited இன் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியான அனில் கொஸ்வத்த,Ó இந்த நெருக்கடியான காலப்பகுதியில் எமது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறிய நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மேலும், இது Litroபோல, வாடிக்கையாளர்களும் டிஜிட்டலை ஏற்றுக்கொள்ள காரணியாக அமையுமென நாம் நம்புகின்றோம். Litro எரிவாயுவிற்கான இந்த விநியோக சேவையானது PickMeஉடன் இணைந்து கொவிட் 19தொற்றின் போது ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவையானது விரைவில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் மிகவும் பிரபலமான சேவையாக மாறியது என்றார்.
PickMeஇன் உட்கட்டமைப்பு மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், Litro நாட்டின் எந்தப் பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் சென்றடைகின்றது. கொவிட் - 19 ஐத் தணிக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு உகந்த வசதிகளை வழங்குவதற்காக தொழில்நுட்ப தீர்வுகளில் முதலீடு செய்து, அவற்றை ஏற்றுக்கொண்ட இலங்கையின் முதல் திரவ பெற்றோலிய எரிவாயு விநியோகஸ்தர் மற்றும் வழங்குநர் Litro Gas என்பது குறிப்பிடத்தக்கது.