அபிலாஷைகளை வலுவூட்டும் வெற்றிகரமான 25 ஆண்டுகளை கொண்டாடுகிறது CDB | தினகரன் வாரமஞ்சரி

அபிலாஷைகளை வலுவூட்டும் வெற்றிகரமான 25 ஆண்டுகளை கொண்டாடுகிறது CDB

பெரியளவிலானதும், இலங்கையிலுள்ள வங்கியல்லாத நிதி நிறுவனங்களுள் மிக வெற்றிகரமானவற்றுள் ஒன்றானதும் மற்றும் அறிவுக்கூர்மையுள்ளதும் நிலைபேறானதுமான இலங்கைக்கு அதிகாரமளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பினால் பலப்படுத்தப்பட்டுள்ளதுமான சிட்டிசன் டெவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பீஎல்சீ , வெற்றிகரமான 25ஆண்டுகளை 2020செப்டம்பர் 7இல் கொண்டாடுகின்றது. இலங்கையின் நிதியியல் அமைப்பினை உருமாற்றும் குறிக்கோளை நோக்கி செயலாற்றிக்கொண்டு, CDB இனது பயணம் கடந்த இரண்டரை தசாப்தங்களாக உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கின்றது.  

நாடெங்கிலுமுள்ள அனைத்து சமூக அடுக்குகளிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி, அண்ணளவாக ரூ. 100பில்லியனை சொத்து அடிப்படையாகக் கொண்டு, இலங்கையிலுள்ள வங்கியல்லாத நிதி நிறுவனங்களுள் பெரியளவிலானவற்றுள் ஒன்றாக CDB இன்று வளர்ந்திருக்கிறது. நாடு பூராகவும் 71கிளைகளையும், 1,700ஊக்கம்பெற்ற தனிநபர்களையும் கொண்டு இந்நிறுவனம் அதன் இறக்கைகளை விரித்துள்ளது. இந்நிறுவனம் வெற்றியை நோக்கிய தனது அர்ப்பணிப்பை நிலைநாட்டி, 2019இல் மதிப்புமிகு பிஸ்னஸ் டுடே முதல் 30இல் தனது இடத்தை கைப்பற்றியது..  

நிலைபேறுதன்மை என்பது இந்நிறுவனத்திற்குள்ளேயான வளர்ச்சியின் முக்கிய தூண்களில் ஒன்று என்பதுடன் சிறுவர் சுகாதாரம் மற்றும் கல்வி, சமூக வலுவூட்டல் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு என்பவற்றை மேம்படுத்துவதற்காக கடந்த வருடங்களில் CDBபல்வேறு முன்னெடுப்புக்களைக் கொண்டு நிலைபேறுதன்மையை ஏற்றுக்கொண்டுள்ளது. CDB இல், நிலைபேறுதன்மையானது வெறும் நன்கொடைகளுக்கும் அப்பால் சென்று குறிக்கோளை ஆதரிப்பதற்காக தனது வியாபார மாதிரியை அடிமட்டத்திலிருந்து மாற்றுவதிலும் மேம்படுகின்றது. இக்குறிக்கோளை நோக்கிய நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டின் விளைவாக, CDB தென்னாசியாவில் ISO 14064 -1 கார்பன் உறுதிசெய்யப்பட்ட முதலாவது நிதி நிறுவனமானது. தொடர்ந்து கொண்டிருக்கும் முயற்சிகள், 2019 சிலோன் சாம்பர் (Ceylon Chamber) இனால் நிலைபேறான கூட்டாண்மைகளுக்கான விருது வழங்கும் விழாவில், இலங்கையிலுள்ள சிறந்த கூட்டாண்மைகளில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது உள்ளடங்கலாக பல்வேறு பாராட்டுக்களை இந்நிறுவனத்திற்கு ஈட்டித் தந்திருக்கின்றன.

Comments