![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/10/25/a18.jpg?itok=58FOlHDB)
நிறுவன மென்பொருளில் முன்னிலை வகிக்கும் புத்தாக்குனரான VMware, Inc., அதன் உள்ளார்ந்த பாதுகாப்பு உற்பத்தி வரிசையில் புதிய மேம்பாடுகளுடன், இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு பல் அமைவிட தொழிற்படை மற்றும் தனியார் மற்றும் பொது மேகக்கணினிகளில் (clouds) புதிய டிஜிட்டல் யதார்த்தத்தில் தங்கள் வணிகத்தை சிறப்பாகப் பாதுகாக்கும் திறன்களை வழங்குகின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளது. விஸ்தரிக்கப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி வரிசை பொது மற்றும் தனியார் மேகக்கணினிகள் (clouds), பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல் அமைவிட பணியாளர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் நெகிழ்திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்கு சிறப்பாக முகங்கொடுக்கத் தயாரான வணிகங்களைக் கட்டியெழுப்பும் முயற்சியில் எந்தவொரு செயலிக்கும் (app), எந்த மேகக் கணினியிலும் (cloud), எந்தவொரு சாதனத்திற்கும் (device) வழங்கப்படும் அணுகலை சாதுரியமாக நிர்வகிக்கவும், பாதுகாப்பாக செயல்படுத்தவும் உதவுகிறது.
VMworld 2020 இல், இலங்கையின் நிறுவனங்கள் பல தசாப்தங்களில் மிகவும் கொந்தளிப்பான ஒரு சந்தைச் சூழலில் நிலைபெற்று, தலைநிமிர உதவும் வகையில் பலவிதமான தீர்வுகளையும் சேவைகளையும் VMware வழங்கி வருகிறது. VMware இன் மேகக் கணினி (cloud), செயலி (app) நவீனமயமாக்கல், வலையமைப்பு, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பணியிட தளங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்பாடுகளை உருவாக்க, இயக்க, நிர்வகிக்க, இணைக்க மற்றும் பாதுகாக்க ஒரு நெகிழ்வான, நிலையான டிஜிட்டல் அத்திவாரத்தை உருவாக்குகின்றன.
VMworld 2020 இல், இலங்கையின் நிறுவனங்கள் பல தசாப்தங்களில் மிகவும் கொந்தளிப்பான ஒரு சந்தைச் சூழலில் நிலைபெற்று, தலைநிமிர உதவும் வகையில் பலவிதமான தீர்வுகளையும் சேவைகளையும் VMware வழங்கி வருகிறது.