![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/10/25/a17.jpg?itok=jspJiMV4)
வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்
இலங்கையில் சமீபத்திய OPPO ஸ்மார்ட் போன் ஆன, F17 Proவை பொழுதுபோக்கு மற்றும் அற்புதமான ஒன்லைன் வெளியீடாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையின் இளைஞர் பிரபலங்கள் மற்றும் நாட்டின் சிறந்த தொழில்நுட்ப இணைய பதிவர்கள் பங்கேற்றனர். இந்த ஒன்லைன் வெளியீடு இலங்கையில் டிஜிட்டல் துறையில் இவ்வாண்டின் வெற்றிகரமான ஒரு மைல்கல்லாக இருந்தது. இலங்கையில் ஒரு மொபைல் தரக்குறியீட்டு வெளியீட்டு நிகழ்வில் நேரலையாக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் கொண்ட முதல் தனியார் நிகழ்வு என்பதே அதற்கான காரணமாகும். டிஜிட்டல் துறைக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்நிகழ்வு, 15 வெவ்வேறு அலைவரிசைகள் மற்றும் பேஸ்புக், யூடியூப் ஆகிய இரு தளங்களில் Full HD தரத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட தனியார் நிகழ்வாகும்.
OPPO F17 Pro நாகரீக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதோடு, விரைவான வாழ்க்கை முறையின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய வாழ்க்கையை மேலும் வலுவூட்டுகிறது. இவை அனைத்தும் உண்மையான பிரீமியம் வடிவமைப்பின் மிக நேர்த்தியான ஸ்மார்ட்போன் உடலை கொண்டதாக காணப்படுகின்றன.
இந்நிகழ்வில் OPPO F17 உடன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OPPO Watch இனையும் OPPO அறிமுகப்படுத்தியது. நீர் எதிர்ப்புத் திறமை மற்றும் Google Wear OS உடன் இயங்கும் OPPO Enco W51, OPPO ஒலியியலின் கீழ் இரைச்சலை இல்லாதொழிக்கும் (ANC) முதலாவது நிகர் மெய்யான வயர்லெஸ் ஹெட்போன்களாகும்.
Xinda Lanka (OPPO Sri Lanka) பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், OF தொடரானது, தற்கால நிகழ்வுப்போக்கை மையமாகக் கொண்ட தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பாணி உணர்வுக்கு ஏற்ற ஒரு தரமான ஸ்மார்ட்போனை அவர்களுக்கு வழங்குகிறது என்றார்.