![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/11/09/a28.jpg?itok=evRthj5P)
கொரோனா வைரஸ் இலங்கையிலும் மிக வேகமாகப் பரவி வரும் இக்காலகட்டத்தில் அனைவரையும் வீடுகளில் முடங்கி இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. வைத்தியர்களும் சுகாதாரத்துறை நிபுணர்களும் கூட கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக வீடுகளில் தனிமைப்பட்டு இருப்பதே சிறந்தது என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். பாடசாலைகள், பிரத்தியே வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள், சுயகற்றல் நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருக்கின்றன. இது பெற்றோருக்குக்கூட பெரும் சுமையாகவும் பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்து சமாளிப்பது ஒரு சவாலாகவும் மாறியிருக்கிறது.
அந்த வகையில் வீட்டில் உள்ள படித்தவர்களைப் பயன்படுத்தி கற்றல்களை மேற்கொள்வதோடு, பெற்றோர்களின் மேற்பார்வையின் மூலமாகவும் பாட ஆசிரியர்களின் ஆலோசனை மூலமாகவும் இணையத்தளத்தில் கற்றல் வழிகாட்டிகள், தகவல்கள், மேலதிக நூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.e--thaksalawa.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் தரம் ஒன்று தொடக்கம் 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள், அதனைக் கற்பதற்கு இலகுவான விதத்தில் மும்மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக இணைய நூலகம், விசேட கற்றல், வினாப்பத்திரங்கள், இணையவழிப் பரீட்சைகள், செயலட்டைகள், பாடங்களை செயன்முறை அடிப்படையில் கற்கும் விதமாகக் காணொலிகள் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழில் இலகுவாக கற்பதற்கு ஈ---கல்வி http://www.ekalvi.org/e-/lessons இணையத்தளமும் பல்வேறு அறிவியல் விடயங்களைக் கற்றுக்கொள்ள https://www.khanacademy.org இணையத்தளமும் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ரீதியான வெளியீடுகளைப் பெற்றுக்கொள்ள https://www.nie.lk இணையத்தளமும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் கடந்தகால வினாப்பத்திரங்கள், புள்ளி வழங்கல் திட்டம் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள https://doenets.lk இணையத்தளமும் காணப்படுகின்றன.(தொடரும்)
சோ. வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம், யாழ். பல்கலைக்கழகம்.