ஒவ்வொரு ஜெனரேட்டர் கொள்வனவுடனும் இணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவையை உறுதியளிக்கும் Ideal Motors | தினகரன் வாரமஞ்சரி

ஒவ்வொரு ஜெனரேட்டர் கொள்வனவுடனும் இணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவையை உறுதியளிக்கும் Ideal Motors

Ideal குழுமத்துக்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமும், இலங்கையில் Mahindra மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயன்பாட்டு தயாரிப்புக்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான Ideal Motors நிறுவனமானது தனது தனித்துவமான விற்பனையின் பின்னரான சேவைகளின் உதவியுடன் குறுகிய காலத்தில் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் Mahindra Powerol டீசல் ஜெனரேட்டர்களின் ஏக விநியோகஸ்தர் அந்தஸ்து Ideal Motors ற்கு வழங்கப்பட்டதுடன்  அன்று முதல் பாரிய மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் Mahindra Powerol இலங்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றது. Mahindra Powerol ஆனது Mahindra என்ஜினுடன் இயங்கும் ஒரு வல்லமை மிக்க ஜெனரேட்டராகும் .

இது குறைந்த எரிபொருள் பாவனை, நீடித்த ஆயுள் மற்றும் குறைந்த ஒலி வெளியேற்றத்துடன் வினைத்திறனும் ஆக்கத்திறனும் மிக்கது.
Mahindra Powerol ஜெனரேட்டர்கள் 5KVA முதல் 320 KVA அளவுகளில் கிடைப்பதுடன், 22 மாதிரிகளில் நாடு முழுவதிலும் உள்ள  Ideal Motors கிளை வலையமைப்புக்களிலும் கவர்ச்சிகரமான விலையில் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஜெனரேட்டர்கள் இரண்டு பிரிவுகளில் காணப்படுகின்றன. எடுத்துச்செல்லக்கூடிய ஜெனரேட்டர் வகை - 5KVA single phase ஜெனரேட்டர்கள் மற்றும் தொழில்துறை ஜெனரேட்டர் வகை - 110KVA 1P/3P முதல்  320KVA வரையான three phase ஜெனரேட்டர்கள் என்பவையாகும்.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், வங்கிகள், மற்றும் சேவை நிலையங்களின் முதல் தெரிவாக Mahindra Powerol ஜெனரேட்டர்கள் உள்ளன.  மேலும் Ideal Motors இல் நாம் பல்வேறு சந்தைகளுக்கு ஏற்ற ஜெனரேட்டர்  வரிசைகளைக் காட்சிப்படுத்துகிறோம் என Powerol தயாரிப்பு செயற்பாடுகளுக்கான முகாமையாளர் ஜனக குலதுங்க கருத்து தெரிவிக்கிறார்.

Ideal குழுமமானது அண்மையில் 75KVA ஜெனரேட்டர்களை திஸ்ஸமஹராமவில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சிறப்பு விலைக்கழிவுடன் நிறுவியுள்ளது. 

Powerol விநியோக உரிமையை பெற்ற பின்னர் Ideal Motors இந்த ஜெனரேட்டர்ளை தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், வங்கிகள்,  ரெலிகொம், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள், Auto Mirage போன்ற தொடர்சியாக மின்சாரம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து விநியோகித்துள்ளது.

 

Comments