OPPO விழிப்புணர்வுக்கான பிரசாரம் முன்னெடுப்பு | தினகரன் வாரமஞ்சரி

OPPO விழிப்புணர்வுக்கான பிரசாரம் முன்னெடுப்பு

புதுமையான மற்றும் விலைக்கேற்ற மொபைல் சாதனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களை வழங்கி வரும் உலகளாவிய முன்னோடி நிறுவனமான OPPO, இந்த நவம்பர் மாதத்தில் OPPO கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய சாதனங்களின் தனித்துவத்தை புரிய வைக்கும் வகையில், அவற்றின் பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தரம் மிக்க பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO தனது சமூக ஊடக வலைத்தள பக்கங்களின் ஊடாக, இப்பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு, அதில் தங்களது சாதனங்கள் தயாரிக்கப்படுகின்ற தொடர்ச்சியான செயன்முறையை, தொடரான வீடியோக்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெளிபுபடுத்தி வருகின்றது. OPPO தனது தரக்குறியீட்டின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதோடு, இது ஆவணப்பட வகையிலான குறும்படங்களாக விளக்கப்பட்டுள்ளன.

 இது தவிர, OPPO இலங்கையில் உள்ள தனது நெருக்கமான வாடிக்கையாளர்களிடமும், தங்கள் சொந்த அனுபவம் மற்றும் நுண்ணறிவு தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இது OPPO வின் உத்தியோகர்வ பேஸ்புக் / இன்ஸ்டாகிராம் கணக்குகள் (@OPPOSriLanka) வழியாக #MyOPPOStory என்ற ஹேஷ்டேக்குடன் பகிர முடியும் என்பதோடு, தனித்துவமான அதன் தரத்தின் முன்மொழிவுகள் தொடர்பான இறுதி நீதிபதிகளாக வாடிக்கையாளர்களையே அது நியமித்துள்ளது. இவ்வாறுவெளியிடப்படும் வாடிக்கையாளர்களின் கதைகளை பின்வரும் இணையத்தள முகவரி மூலம்  பார்வையிடலாம்: shorturl.at/egyO4

 OPPO ஆனது BENFEN தரக்குறியீட்டின் கலாச்சாரத்தின் ஒரு ஒருங்கிணைந்த அம்சமாகக் கருதுவதோடு, இது புதுமை மூலம் நிலைமையை சவால் செய்ய அவர்களைத் தூண்டுகிறது.

பயனரை கருத்திற் கொண்டு வடிவமைப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட அணுகுமுறையைப் பற்றி, F தொடரின் சிரேஷ்ட கட்டமைப்பு பொறியாளர் சேம் சென் (Sam Chen) தெரிவிக்கையில், “பயனர்கள் பொதுவாக மிக மெல்லிய மற்றும் மிக பாரம் குறைந்த தயாரிப்புகளையே கோருகின்றனர் என்றார்.

Comments