![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/06/a29.jpg?itok=vkMS2UxO)
தற்போதைய அவசரகால நிலைமை காரணமாக வாழ்வில் எழுந்துள்ள நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஜனசக்தி இன்சூரன்ஸ் பீஎல்சி நிறுவனம், “ஜனசக்தி கொவிட் கார்ட்” (Janashakthi Covid Guard) காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சவாலான காலகட்டங்களில் தேசத்தின் பாதுகாப்பையும் காப்பீட்டையும் உறுதி செய்வதற்குத் தக்க தருணத்தில் அறிமுகமாகும் காப்புறுதித் திட்டமாக இது காணப்படுகின்றது.
இந்த புத்தாக்கமான காப்புறுதித் தீர்வு நிதியியல் ரீதியாக ஸ்திரத்தன்மையையும், மேம்பட்ட ஆயுள் காப்பீட்டையும் வழங்குவதுடன், வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக வடிவமைக்கப்படக்கூடியது.
“ஜனசக்தி கொவிட் கார்ட்” என்பது சில்வர் (Silver), கோல்ட் (Gold) மற்றும் பிளாட்டினம் (Platinum) போன்ற பல வகைப்பிரிவுகளைக் கொண்டுள்ள ஒரு விரிவான காப்புறுதித் திட்டம் என்பதுடன், தேவைக்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைத்துக் கொள்ளவும் முடியும். குறிப்பாக இந்த அவசரகால சூழ்நிலையில் மிகவும் தேவையான நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்த காப்புறுதித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 அல்லது விபத்து காரணமாக ஏற்படும் மரணத்திற்கான காப்பீடு, அரசாங்க அங்கீகாரம் பெற்ற இடங்களில் தனிமைப்படுத்தப்படுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதால் ஏற்படும் வருமான இழப்பு மற்றும் கொவிட்-19 காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவொன்றில் அனுமதிக்கப்படு வதற்கான காப்பீடு ஆகியவை அடங்கலாக பல முக்கியமான நன்மைகளை இத்திட்டம் கொண்டுள்ளது. மேலும், இந்தத் திட்டமானது பி.சி.ஆர் சோதனைக்கான செலவையும், மிக முக்கியமாக கொவிட்-19 தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதற்கான செலவையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த தனித்துவமான காப்புறுதித் தீர்வு குறித்து, ஜனசக்தி இன்சூரன்ஸ் பீஎல்சி இன் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரவி லியனகே அவர்கள் கூறுகையில், “இது காலத்தின் தேவை என்பதை நாங்கள் உணர்வதுடன், நோக்கத்தினால் வழிநடாத்தப்படும் காப்புறுதி சேவை வழங்குனர் என்ற வகையில் நமது தேசத்திற்கு உதவ நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறுப்பிடுவோம்.