![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/06/a31.jpg?itok=I_4_0fSc)
Swadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது.
‘சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்’ (Swadeshi Khomba Baby Hoda Purudu) எனப் பெயரிடப்பட்டுள்ள நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில், சபுகஸ்கந்த சோபித்த வித்தியாலயத்தின் (ஆரம்பப் பிரிவு) தரம் 3 ஐச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Swadeshi Industrial Works PLC இன் ஊடகப் பேச்சாளார் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், 12 நல்ல பழக்கவழக்கங்கள் தொடர்பில் விளக்கமளித்திருந்ததுடன், அதன் பின்னர் யுனிசெப் நிபுணர் (நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்) நிலுஷா பட்டபெந்தி 12 படிமுறைகளில் கைகளைக் கழுவுதல் தொடர்பில் விளக்கமளித்திருந்தார். இதன் போது நல்ல பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தும் தொடர்பில் அரங்கேற்றப்பட்ட நாடகத்துடன் கை கழுவுதல் தொடர்பான பாடலொன்றும் பாடசாலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சிறுவர்கள் நன்கு அனுபவித்து மகிழ்ந்தனர். இந் நிகழ்வானது 50 மாணவர்கள் தமது கலைத் திறனை வெளிப்படுத்திய ‘நல்ல பழக்கவழக்கங்கள்’ சித்திர போட்டியுடன் நிறைவு பெற்றது.
‘நல்ல பழக்கவழக்கங்கள்’ விழிப்புணர்வு பிரசாரத்தின் ஓர் அங்கமாக, சுவதேசி கொஹம்ப பேபி குழுவானது யுனிசெப் வழிகாட்டுதலின் அடிப்படையில் கை கழுவுவதற்கான சரியான 12 படிமுறைகளைக் காட்சிப்படுத்தும் 12 விழிப்புணர்வு பலகைகளை பாடசாலையில் பொருத்தியதோடு, கை கழுவும் 12 படிமுறைகளைக் காட்டும் கை கழுவும் தொட்டிகளையும் நன்கொடையாக வழங்கியது.
2019 ஆம் ஆண்டில், Swadeshi நிறுவனம் யுனிசெப் அமைப்பின் BetterParenting.LK உடன் ஒரு புரட்சிகர பங்குடமையில் இணைந்து கொண்டதன் ஊடாக குழந்தை பராமரிப்பு, அபிவிருத்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த நிபுணர்களின் தகவல்களை வழங்கும் இந்த ஒன்லைன் தளத்துக்கு சுவதேசி ஆதரவளித்தது.