![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/13/a31.jpg?itok=fFddngGa)
இலங்கையில் மிகவும் பிரபலமான சூர்யா விற்பனை நாமத்தை உரிமையாகக் கொண்டுள்ள Sun Match Company தனியார் நிறுவனம் Sun என்ற விற்பனை நாமத்தின் கீழ் சமீபத்தில் பல உற்பத்திகளை இலங்கை விற்பனை சந்தைக்கு அறிமுகம் செய்தது.
பெயருக்கு பொருத்தமான பல்வேறு புதிய பண்புகளுடன் இந்த சகல உற்பத்திகளும் சுற்றுச்சூழலை நறுமணத்தால் புத்துணர்வூட்டுவதுடன் கிருமிநீக்கம் செய்யும் பணியை மேற்கொள்கிறது.
உணவு வகைப்படுத்தல் தயாரிப்புகளின் கீழ் சான்றளிக்கப்பட்ட இந்த sun உற்பத்திகளில் ஒரு துளி நீரையேனும் பயன்படுத்தாமல் மேற்பரப்பில் உள்ள கிருமிகளை 99.9% அழிக்கக்கூடிய வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் (Broad- spectrum biological activity) எனப்படும் உயிரியல் செயற்பாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
புத்தாக்க தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த உற்பத்திகள் ஏனைய உற்பத்திகளில் இருந்து மாறுபட்டே இருக்கும். அதாவது இது சாதாரண கிருமியழிப்பானை விட இதன் நறுமணம் அதிக காலத்திற்கு நீடித்துழைக்கும் தன்மையுடையது.
எலுமிச்சையின் அற்புதமான நறுமணத்தோடு உங்கள் மனநிலையை மாற்றக்கூடிய ஐஸ் பைன் பிரெஷ் உற்பத்தியின் வாசனை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தொற்றுநோய் பரவல் தொடர்பாக சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்த விவாதங்கள் அரச மற்றும் தனியார் துறைகளில் மிகவும் சூடுபிடித்த வாத விவாதங்களை சமீப காலமாக பார்க்கக்கூடிய வகையில் உள்ளது.