![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/13/a30.jpg?itok=JvLjmRe_)
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிராந்தியத்தின் பாரிய சீமெந்து உற்பத்தி வசதியான லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (பிரைவட்) லிமிடட் 2021 ஜுன் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வசதியானது ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் 63 ஏக்கர் பரப்பளவு விஸ்தீரணம் கொண்டதாகும்.
முதலீட்டு சபையின் முயற்சியின் கீழான இத்திட்டத்தின் முதலாவது கட்டம் 70 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு என்பதுடன், இதன் உற்பத்தித்திறன் வருடமொன்றுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக்தொன் ஆகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் மேலும் 10 மில்லியன் அமெரிக்க டொலர் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படவிருப்பதுடன், இதன்மூலம் உற்பத்தித் திறன் மேலும் 1.2 மில்லியன் மெட்ரிக்தொன்னாக அதிகரிக்கும்.
ஜேர்மன் தயாரிப்பான Gebr Pfeiffer இயந்திரம் மற்றும் புத்தாக்கத்தில் உலகின் முன்னணியாளரான Siemens ஆகியவற்றை கலவையாகக் கொண்ட பிந்திய தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அமைவது இதன் சிறப்பம்சமாகும். நிறைந்த வினைத்திறன் மற்றும் குறைந்த விரயம் என்பவற்றை முன்னேற்றக் கூடியதாக உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட FLSmidth இனால் பொதியிடல் மேற்கொள்ளப்படும்.
போர்ட் சிட்டி மற்றும் அதிவேக நெடுஞ்சாலை போன்ற உள்ளுார் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அவற்றுக்கான தேவைகளை லன்வா சன்ஸ்தா சீமெந்தினால் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண போலாந்து சீமெந்து (OPC) போலந்து ஸ்லக் சீமெந்து (PSC) போலந்து சுண்ணாம்பு சீமெந்து (PLC) ஆகியவற்றின் கலவையாகவும் இது காணப்படும்.
லன்வா சன்ஸ்தா சீமெந்து கோப்ரேஷன் (பிரைவட்) லிமிடட் ஆனது லன்வா என்ற நாமத்தில் QT bars, Hot Dipped Galvanized pipes (GI pipes), BOX bars, Round Tubes, Wire Nails, MS rods, purlins போன்றவற்றை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி இரும்பு உற்பத்தியாளரான சிலோன் ஸ்டீல் கோப்ரேஷன் லிமிடட் நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகும்.