![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/13/a32.jpg?itok=dlMIXkVA)
இலங்கையின் அனுமதியளிக்கப்பட்ட பங்குச்சந்தை செயற்படுத்துனரான கொழும்பு பங்குப்பரிவர்த்தனை தனது 35ஆவது வருட பூர்த்தியை கொண்டாடுகிறது.
இலங்கை மக்களின் முயற்சியாண்மை மெய்ப்பொருள் தொடர்பாக வங்கியியல் காணப்பட்டபோது, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை பங்கு வியாபார கலாச்சாரத்தினை கட்டியெழுப்பி ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அது நிலைத்துள்ளது.
1896 ஆம் ஆண்டு பெருந்தோட்ட கம்பனிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பங்கு வியாபார வணிகமானது ஒரு முழு வளர்ச்சி பெற்ற மற்றும் துடிப்பான பங்குச்சந்தையாக வருடத்திற்கு ரூபா. 300 பில்லியன் மூலதன உருவாக்கத்தினைக் கொண்டு பலமான வளரச்சியுடன் தொடர்ந்து இயங்குகின்றது.
கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது 1985 ஆம் ஆண்டு ஏழு பங்குத்தரகர் நிறுவனங்களால் கொழும்பு செக்கியூரிட்டீஸ் எக்ஸ்சேஞ் கெரண்டி லிமிடெட் (Colombo Securities Exchange Guarantee Limited) ஆக உருவாக்கப்பட்டது. உத்தரவாதத்தால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒரு கம்பனியானது இலங்கையின் நிதிச்சேவை பரப்பில் ஒரு நிலைமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.
இன்று, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையானது இறுதி மட்ட அடிப்படையிலான எண் மின்நிலைப்படுத்தப்பட்ட வியாபாரத் தீர்வு சேவைகளை வழங்குகின்ற பங்குத்தரகர் நிறுவனங்களின் வலையமைப்பினுௗடாக 700,000 இற்கும் மேற்பட்ட தனிநபர் முதலீட்டாளர்களுக்கும் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கும் வியாபாரத்திற்கு முன்னரான, வியாபார மற்றும் வியாபாரத்திற்கு பின்னரான சேவைகளை வழங்கி வருகின்றது. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து மேற்கொண்ட வளர்ச்சியுடைய ஒரு பயணத்தின் ஊடாக இலங்கையின் மூலதனச் சந்தைக்காக தீர்மானமிக்க மற்றும் நேர்த்தன்மையான பலன்களை பங்குப்பரிவர்த்தனை கொண்டுள்ளது.